33
இளவரசன், எதிர்கால வேந்தன் சார்லஸ், ஒரு பிராடெஸ்டெண்டு மங்கையை மணத்துகொள்வதுதான், நாட்டிலே மதச் சீர்குலைவு ஏற்படாதிருக்கும் என்பதற்கான உறுதி தரும், என்று மக்கள் எண்ணிட, மன்னனோ, மதம் எதுவாயினும் சம்மதமே, பொருள் எவ்வளவு தரக்கூடும், அதைப் பொருத்தே பெண்கொள்ளல்வேண்டும் என்று கூறினான்—அம்முறையிலேயே 'தூதுகள்' சென்றன, வந்தன, ஏற்பாடுகள் உருவாகிக்கொண்டிருந்தன.
இளவரசனுக்குப் பெண் தர இரு பேரரசுகளிலே முன் வந்தனர்—ஸ்பெயின், பிரான்சு, பணம் உண்டு ஆனால், சில நிபந்தனைகளும் உண்டு! இரு பேரரசுகளும், கத்தோலிக்க மார்க்கம். எனவே, இரு அரசுகளும், ஜேம்ஸ் கேட்கும் தொகை தர முன்வந்தாலும், திருமணத்துக்கான முதல் நிபந்தனையாக, கத்தோலிக்க மார்க்கத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டும் என்றனர். இதிலே ஸ்பெயின் நாடு, தொகையும் அதிகமாக அளிக்க இசைந்தது, அதுபோலவே நிபந்தனைகளும் கடுமையாக இருந்தன—மக்கள் மனதிலே, இந்தக் 'கலியாணப் பேச்சு' மேலும் வேதனையை மூட்டிற்று.
மக்களின் விருப்பத்தைத் துளியாவது மதித்து நடக்கும் மன்னனாக இருந்தால்தானே, இதற்காக ஜேம்ஸ் கவலைப்படுவான்! அவன்தான் ஆண்டவன் அருள்பாலிக்கப் பெற்றவனாயிற்ற, மக்களின் துணை ஏன்! எந்தப் பெண், அதிகமான பணம் கொண்டுவருவாளோ, அவளையே தேர்ந்தெடுப்பது என்ற திட்டமிட்டான், பக்கிங்காம் இதை நிறைவேற்றிவைக்கும் பொறுப்பாளனாக்கப்பட்டான். இளவரசனே, நேரில் சென்று, ஸ்பெயின் நாட்டு| இளவரசியைக் கண்டு, காதலைக் காணிக்கையாக்குவதென்றும், பக்கிங்காம் திருமண ஏற்பாட்டைத் தீட்டிக்கொண்டு வருவதென்றும், தீர்மானிக்கப்பட்டது—அதா-