பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வது, பக்கிங்காம்‌ தீர்மானித்தான், மன்னன்‌ இணங்கினான்‌ இளவரசன்‌ பாராட்டினான்‌, என்று பொருள்‌.

இளவரசனும்‌ பக்கிங்காமும்‌, மாறுவேடமணிந்து, ஸ்பெயின்‌ நாடு சென்றனர்‌. இருவரும்‌ வாலிபப்‌ பருவத்‌தினர்‌. சார்லஸ்‌, அழகன்‌! பக்கிங்காம்‌ தன்‌ அழகெனும்‌ அம்பு எந்த அரண்மனையையும்‌ துளைக்கவல்லது என்ற அபாரமான நம்பிக்கை கொண்டவன்‌.

“இளவரசரே! தங்களைக்‌ கண்டதும்‌, இளவரசி, சொக்கிப்போய்விடுவது நிச்சயம்‌. தந்தையிடம்‌ கெஞ்சுவாள்‌ அந்தத்‌ தையல்‌. தோழிகள்மூலம்‌ சொல்லுவாள்‌, கடுமையான நிபந்தனை விதித்து, அந்தக்‌ கட்டழகனை விரட்டிவிடவேண்டாம்‌ என்று மன்றாடுவாள்‌. தூதுவர் பேசிப்‌ பலன்‌ ஏற்படாது—ஓலைகள்‌ அனுப்புவது உருப்‌படாது, மங்கை தன்‌ மலர்விழியால்‌ தங்கள்‌ தங்கத்‌ திருமேனியைக்‌ காணவேண்டும்‌, தாளில்‌ வீழ்வாள்‌. திருமணம்‌ நிச்சயம்‌!” என்று பக்கிங்காம்‌ எடுத்துரைக்க, வாலிப உள்ளத்துக்கு மகிழ்வளிக்கவல்ல காதல்‌ விளையாட்டு இது என்ற சுவைமிகு எண்ணம்கொண்ட இளவரசன்‌, எவ்வளவு பரவசமடைந்தானோ, யார் கண்டார்கள்! கன்னியரை தன்‌ கடைக்கண்ணால்‌ கவரமுடியும்‌ என்று பேசித்திரிந்த பக்கிங்காம்‌, இளவரசனுக்குக்‌ காதல்‌ காட்சி காட்டச்‌ செல்லும்‌ அதேபோது, தனக்காக என்‌னென்ன இன்ப விருந்துகள்‌ கிடைக்கும்‌ என்று எதிர்‌பார்த்தானோ, யார்‌ கண்டார்கள்‌! மக்களோ, இந்தச்‌ செய்தி அறிந்து பயம்‌ கொண்டனர்‌.

ஸ்பெயின்‌ பேரப்பாண்டவனின்‌ பாததூளிபட்டால்‌ புண்யம்‌ கிடைக்கும்‌ என்று கருதும் அளவுக்கு கத்தோலிக்க ஆர்வம்கொண்ட நாடு. ஐரோப்பாவில்‌, அழிந்துபட்ட இடங்களிலெல்லாம்‌, மீண்டும் கத்தோலிக்க மார்க்கத்தைப்‌ புகுத்தவேண்டும்‌, இந்த புனித கைங்கரி-