பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டால்‌ தான்‌ விடுதலையும்‌ திருமணமும்‌, என்றுகூறி விட்‌டால் என்ன செய்வது, என்ற அச்சம்,

வீண்‌ வேலையாக முடிந்தது, இந்த இளைஞர்களின்‌ காதல்‌ பயணம்‌, பிரிட்டன்‌ திரும்பினான்‌ சார்லஸ், மக்கள்‌ மகிழ்ந்து வரவேற்றனராம்‌, சார்லசிடம் புதிய அன்பு பிறந்ததால்‌ அல்ல, ஸ்பெயின்‌ நாட்டுப்‌ பெண்‌ வரவில்லை என்ற மகிழ்ச்சியால்!

பக்கிங்காம்‌, தூபமிடலானான்‌, ஸ்பெயினுடைய துடுக்குத்‌தனத்தைத்‌ தாக்க வேண்டுமென்று, சார்லசும், துணை நின்றான்‌, ஜேம்சுக்கும்‌ அது நியாயம்‌ என்று தெரிந்தது, மக்கள்கூட வரவேற்றனர்‌. அந்த நேரத்திலாவது, ஜேம்ஸ்‌ மக்களுடைய ஆதரவைப்‌ பெற முயன்றிருக்கலாம்‌, செய்தானில்லை ஏன்‌ செய்வான்‌, அவன்தான்‌, மக்‌களை மதிப்பது மன்னனுடைய மகிமையைக்‌ கெடுத்துவிடும்‌ என்ற கேடான கருத்துக் கொண்டிருந்தானே!

பிரன்ச்சு நாட்டு அழகி ஹெனிரிட்டாவை, சார்லஸ்‌, திருமணம்‌ செய்துகொள்வது, என்று ஏற்பாடயிற்று, நிபந்தனைகளின்‌ கடுமை ஓரளவு குறைவுதான்‌, என்ற போதிலும்‌, இந்தத்‌ திருமணத்தின்‌ விளைவாகப்‌ பிரிட்டனில் கத்தோலிக்க ஆதிக்கம்‌ தலைதூக்கும்‌ என்ற அச்சம்‌ மக்கள்‌ மனதை வாட்டத்தான்‌ செய்தது, கொதிப்புள்ளம்‌ கொண்ட மக்களை, கொண்ட மட்டும்‌ கிளறி விட்டுவிட்டு, இனி என்‌ மகனிடம்‌ கணக்குத்‌ தீர்த்துக்கொள்க என்று கூறுவதுபோல, ஜேம்ஸ்‌ இறந்துபட்டான்‌; சார்லஸ்‌ பட்டத்தரசனானான்‌, பக்கிங்காம்‌ அரசாளத்‌ தொடங்கினான்‌.

ஆக, சார்லஸ்‌ பட்டத்தரசனானபோது, தீதான தத்துவம்‌, தீயகுணமுடை பக்கிங்காம்‌, தீராதபணமுடை, திகில்‌ கொள்ளவைக்கும்‌ மார்க்கத்தைச்‌ சார்ந்த துணைவி, இந்த