39
அணிகள் அழகு செய்தன! மக்களோ மருண்ட நிலையில், மாமன்றமோ, உறுதியுடன்! மார்க்கப்பிரிவுகளோ, மல்லுக்கு நிற்பதில் போட்டியிட்டவண்ணம்! வெளி நாடுகளிலோ, பகைப்புகை! இந்தச் சூழ்நிலையில் துவக்கமாகிறது சார்லசின் ஆட்சி—ஆனால், அது ஜேம்ஸ் ஆட்சியின் தொடர்கதையாக இருக்கிறதே தவிர, புதியமுறை ஏதும் காணப்படவில்லை, ஜேம்ஸ் பிடிவாதமாக எதை வலியுறுத்தி வந்தானோ, அந்தக் கொள்கையை, விளைவு பற்றிய கவலையுமற்று வலியுறுத்துவதற்கே சார்லஸ் முனைந்தான். மன்னர் புதிது, முறை எப்போதும் போலத்தான். மாமன்றத்தினரேர, புதிய வலிவுடன் தோன்றினர் மக்களிடையே, உரிமை பற்றிய எண்ணம் தெளிவாக்கப்பட்டுவிட்டதால், கிளர்ச்சிபோக்கு வெளிப்படையாகவே தெரியலாயிற்று. மக்களின் உரிமைக் கிளர்ச்சியைத் திறம்பட நடத்தும் அறிவாற்றல் படைத்தவர்களும், பிரிட்டிஷ் அரசியல் முறையைப் புதுப்பிக்கும் பேரார்வம் கொண்டவர்களுமான போக், பிம், ஹாம்டன், செல்டன், டிகிஸ், எலியட், போன்ற வீரர்கள் மாமன்றத்திலே உறுப்பினர்களாகி இருந்தனர், இதுவரை எப்போதும் காணப்படாத ஆர்வம், கொழுந்துவிட்டெரியும் நேரம். அரசியல் துறையின் அடிப்படை கொள்கைகளை அலசும் போக்குத் தெளிவாகிக் கொண்டிருந்தது. மக்களின் உரிமையைப் பெறவும், பாதுகாக்கவும், மாமன்றம் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் பலமாகிவிட்டது. மன்னன் அல்ல, மாமன்றமே, அரசாளும் பொறுப்பை அறிந்தொழுகும், எனவே நாம், மாமன்றத்தின் பக்கமே நிற்கவேண்டும் என்று மக்கள் கூறலாயினர். எங்கும் அரசன் செய்த அக்ரமத்தைபற்றியும், அவன் வலியுறுத்திய தேவாம்ச, தத்துவம்பற்றியும், நாட்டைக் கெடுக்கும் துரோகிகளுக்கு இடமளிப்பது பற்றியும்