42
படைகளோ அமைக்கப்படுகின்றன; பணம் அவசரமாகத் தேவை, போர்வீரர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை, உடைகூடச் சரியாக இல்லை! கலங்கள் தேவை கடற்போருக்கு! ஸ்பெயின் நாட்டுடன் போரிடவேண்டும்—இந்த நெருக்கடியான நேரத்தில் மாமன்றம் உரிமை பற்றிப் பேசுவதா என்று மன்னன் கோபம்கொண்டான், மாமன்றத்தைக் கலைத்துவிட்டு வேறு வழிகளில் பணம்தேட முனைந்தான்—தந்தை சென்ற அதே, தகாத பாதை!
மன்னனுடைய சீற்றத்துக்கு முக்கியமான காரணம், பக்கிங்காம் மீது மாமன்றம் கண்டனம் தெரிவித்ததாகும், மாமன்றத்தின் துணையின்றி அரசு செலுத்த முடியும், என்ற துணிவுடன் சார்லஸ், பணம் தேடலானான். பணம் திரட்டி, கடற்படையைச் செம்மைப்படுத்தி ஸ்பெயின் மீது போர் தொடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும், வெற்றியின்போது, ஸ்பானிஷ் கப்பல்களைப் பிடித்தால், கொள்ளை கொள்ளையாகச் செல்வம் கிடைக்கும் என்று நம்பினான். பாவம்! மானைத் தேடிச்சென்றே, பிடித்திட முடியாமற் திரும்பினான். இப்போது புலியை வேட்டையாடிக் கொன்று, அதன் குகையிலிருக்கும் புதையலைப் பெறக் கிளம்பினான். சார்லஸ் மன்னனிடம், இந்தக் குறைபாடு, நிரம்பி இருந்தது. தனக்கு வேண்டியவர்கள் சொல்வதை ஆராய்ந்து பாராமல் நம்பிவிடுவது, சார்லசின் சுபாவம். தானாக ஒரு முடிவுக்கு வந்தாலும், அது சரியான முடிவுதானா என்று ஆராய்வதில்லை. அதிலே அசைக்கொணாத நம்பிக்கை கொள்வான். போர் குறித்து அவன் கொண்ட நம்பிக்கையும் அத்தகையதே. போரிலே பிரிட்டன் கேவலமான தோல்வி அடைந்தது! மக்கள் ஒரு புறம் வேதனை அடைந்தனர், மற்றோர்புறம் மக்கள் மகிழவும் செய்தனர். மக்களுடைய ஆதரவை மாமன்றத்தின் மூலம்