43
பெறாமலேயே, போரில் குதித்த மன்னன், தோல்வி கண்டதே சாலச் சிறந்தது, இதனின்றும் நல்ல பாடம் பெறுவான் என்று எண்ணி மகிழ்ந்தனர், ஆர்ப்பரித்து வந்த ஸ்பானிய கடற்படையை எலிசபெத் ராணியார் காலத்தில் தோற்கடித்த பிரிட்டிஷ் கடற்படை தோற்கிறதே, கீர்த்தி கருகிவிட்டது, கேவலமான பெயரல்லவா கிடைக்கிறது என்று எண்ணும்போது வேதனையாகத்தான் இருந்தது. ஸ்பெயின், கத்தோலிக்கக் கோட்டை—பிரிட்டன் பிராடெஸ்டெண்டு மார்க்கத்துக்குப் பாதுகாவலன் என்ற எண்ணம் மெள்ளமெள்ளப் பரவிக் கொண்டிருந்தது, அந்த மதிப்பு மங்கிவிட்டதே, என்பதை எண்ணி மக்கள் வருந்தத்தான் செய்தனர்—மன்னர்கள்போல, நாடு எக்கெடோ கெடட்டும், என்று இருத்துவிடுவதா, மக்கள் பண்பு! அவர்கள் இந்தத் தோல்வி கண்டு துயருற்றனர்—துயரம் பிறகு கோபமாக மாறிவிட்டது. கேவலமான பெயர்! நாட்டுக்கு!!–யாரால்? மதிகெட்டவர்களையும் மமதையாளர்களையும் சூழநிறுத்திக் கொண்டிருக்கும் மன்னனால் போர், மக்களின் சார்பிலே தொடுக்கப்படவில்லை, பக்கிங்காம், ஸ்பெயின் கொலுமண்டபத்திலே மதிப்பிழந்தான். வீம்புக்காக அவன் இந்தப் போரை மூட்டிவிட்டான்—தக்க காரணமற்றுப் போரை மூட்டிவிட்டுப் போதுமான திறமையைக் கட்டத் தவறி, நாட்டுக்குக் கேவலத்தைத் தேடிவைத்தார்கள், எப்படி இவர்களின் போக்கைச் சகித்துக்கொள்வது, எவ்வளவு காலத்துக்கு இந்தச் ‘சுமை’யைத் தாங்கிக் கொள்வது, என்ற பேசலாயினர்.
இந்தத் தோல்வி போதாதென்று பக்கிங்காம், வேறோர் தோல்வியையும் சிரமப்பட்டுத் தேடித்தந்தான்.
பிரான்சும்—பிரிட்டனும், மார்க்கத்தால் வேறுபட்டிருந்தாலும், திருமணத்தால் நேச நாடுகளாகிவிட்டன.