47
இதைப் புதுப்பித்து, நாடு முழுவதும் 173,000 பவுன் கப்பல் வரி கட்டவேண்டும் என்று கட்டளையிட்டான்.
மாமன்றம், மன்னன் கேட்கும் பணத்தைத் தர இசையவில்லை என்றதும், இந்தவிதமாகப் பணம் ‘தண்ட’த் துணிந்தது மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டிற்று. மாமன்றத்திலே மக்கள் சார்பாகப் பேசுபவர்களை, ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் மன்னன் வளையவைக்கலாம் என்று எண்ணினான்; ஆசைக்குச் சிலர் பலியாகிப் பதவிகள் பெற்றுப் பொதுமக்களின் வெறுப்பைப் பெற்றனர், ஆனால் அச்சத்துக்கு ஒருவரும் ஆட்படவில்லை. அவர்கள் மனதிலே. தூய்மையான ஓர் போராட்டத்திலே இறங்குபவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் ஓர் உறுதி குடிகொண்டது. தனிப்பட்ட வாழ்விலே எத்தகைய ஆபத்துச் சூழினும் தாங்கிக்கொள்வதுதான். மக்களின் நல்வாழ்வுக்கு வகைதரும் என்ற பெருநோக்கம் கொண்டனர். அவர்களை அரசன் மிரட்டினால், மக்கள் திரண்டெழுந்து அவர்களைக் காக்க நின்றனர். மாமன்றம் யாரோ விஷயமறிந்தவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் இடம் என்பது மாறிவிட்டது—மக்களை மதிக்க மறுக்கும் மன்னனுடன் அறப்போர் நடாத்தத் திட்டம் தீட்டும் திருச்சபை என்று மாமன்றம் கருதப்பட்டது. மக்கள் அடிக்கடி பெருவாரியாகக் கூடி, மாமன்ற வாயிலுக்கு வந்து முழக்கமிடுவதும், உரிமைக்காகப் போரிடுபவர்களைப் பாராட்டி ஆரவாரம் செய்வதும், மன்னனுக்கு தலையாட்டிகளாகிவிட்ட தர்பார் தளுக்கர்களைக்கண்டால் கண்டன முழக்கமிடுவதும், பழக்கமாகிவிட்டது. இரண்டிலொன்று தெரிந்துகொண்டாக வேண்டும் என்ற நிலை பிறந்துவிட்டது. இதனை அறியாத மன்னன், கண்களை உருட்டினால் காரியம் நடைபெறும் என்று எண்ணினான். தூக்குமேடை அமைக்கப்பட்டபோது