பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வெற்றி பெற்றது, மக்கள்‌ உரிமைக்காகப்‌ போரிட்ட வீரரை, நாடு வாழ்த்திற்று, புதிய வலிவு கிடைப்பதறிந்து, மாமன்றம்‌ பூரிப்படைந்தது.

மாமன்றமும்‌ மக்களும்‌ பூரிப்படையும்‌ மற்றோர்‌ சம்பவம்‌ நடைபெற்றது. பக்கிங்காம்‌ கொல்லப்பட்டான்‌.

ஒருமுறை தோற்றதால்‌ மனம்‌ உடையாத அந்த உல்லாச பிரபு மீண்டும்‌ படை திரட்டிக்கொண்டிருந்தான் பிரொன்சைத்‌ தாக்க. அதுபோது, அவனுடைய படையிலிருந்து பணியாற்றி நீக்கப்பட்ட, பெல்டன்‌ என்பவன்‌, பக்கிங்காம்‌, சில பிரான்சுக்காரருடன்‌ பேசிக்கொண்டிருந்துவிட்டு, மாளிகைக்கு உள்ளே செல்லும்போது, கத்தியால்‌ குத்திக்‌ கொன்றுவிட்டு ஓடிவிட்டான்‌. பிரபுவின்‌ ஆட்களில்‌ சிலர்‌, அவனைப்‌ பிடிக்க ஓடினர்‌, வேறு சிலர்‌ அவன்‌ வீசிவிட்டுச்‌ சென்ற, தொப்பியைக்‌ கண்‌டெடுத்தனர்‌. அதிலே! பக்கிங்காம்‌ நாட்டுக்காகத்‌ துரோகம் செய்தது குறித்து மாமன்றத்திலே எழுப்பப்‌பட்ட கண்டனக்‌ குறிப்புச்‌ சில எழுதிய சீட்டுக்‌ காணப்‌பட்டது. சொந்த விரோதம்‌ காரணமாக மட்டுமல்ல, நாட்டுக்குத்‌ துரோகம்‌ செய்பவனைத்‌ தீர்த்துக்‌ கட்ட வேண்டும்‌ என்பதற்காகவும்‌ இந்தக்‌ கொலை, என்பதை பெல்டன்‌ அறிவிக்கவே, அவ்விதம்‌ செய்திருந்தான்‌.

“யாருடைய ஏவுதலால்‌ இவ்விதம்‌ செய்தாய்?” என்று விசாரணையின்போது கேட்டதற்கு, பெல்டன், “என்னை எவரும்‌ ஏவவில்லை; நானேதான்‌ கொன்றேன்‌” என்று துணிந்து கூறினான்‌.

பக்கிங்காம்‌ கொல்லப்பட்டது கேட்டு மக்கள்‌ ஒரு ஆறுதல்‌ அடைந்தனர்‌—மன்னனைக்‌ கெடுக்கும்‌ மாபாவி ஒருவன்‌ ஒழிந்தான்‌, இனி ஒரு சமயம்‌, நல்ல நிலைமை ஏற்படக்கூடும்‌ என்றுகூட எதிர்பார்த்தனர்‌. ஆனால்

4