53
மக்கள் மண் பொம்மைகளல்ல, உரிமை கேட்கும் வீரர்கள், என்ற புது உறுதி பொலிவுற்றது. வழக்கு மன்றத்திலே, மன்னனுடைய செயல் விவாதிக்கப்படுகிறது! முடிதரித்த மன்னன்தான், அரண்மனையில்தான் வாசம், எனினும், அவனும் தவறான முறையிலே, தன்னிச்சைப் படி நடந்துகொண்டால், நீதிமன்றம் குறுக்கிட்டு, மக்கள் உரிமையைக் காப்பாற்றத்தான் வேண்டும், என்று நாடு பேசலாயிற்று, நல்லோர் எடுத்துரைத்தனர்.
இந்த வழக்கு, பல அடிப்படைப் பிரச்னைகள் விவாதிக்கப்படவும், மறைந்திருந்த பல உண்மைகள் வெளிவரவும், வாய்ப்பளித்தது. மன்னன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், மன்னன் சட்டம் செய்யும் ஆற்றலும் உரிமையும் படைத்தவன், என்று கூறினர். ஐவர் சார்பில் வாதாடியவர்கள், சட்டம் இயற்றும் உரிமையை மக்கள் மன்னனுக்குத் தந்தனர் எடுத்துரைத்தனர். மாமன்றம் என்பதே, மன்னன் இச்சைப்படி ஏற்படுத்தியது என்று மன்னன் சார்பினர் கூறினர். இல்லை, இல்லை, மாமன்றம், மக்கள் அமைத்துக்கொண்ட உரிமைக் கோட்டம் என்று கூறி, மன்னன் வாதத்தை மறுத்தனர், மக்களாட்சிக்காகப் போரிட்டவர்கள்.
இந்த வழக்கின் முடிவைப் பொறுத்தே எதிர்கால அரசியல் முறை இருக்கும், எனவே, முழுத்திறமையையும் பயன்படுத்தி, இந்த வழக்கிலே வெற்றி பெற்றாக வேண்டும், என்று இருதரப்பிலும் முனைந்து வேலை செய்தனர்.
கட்டாயக் கடன் தரத்தான்வேண்டுமா, என்று துவங்கிய பிரச்னை, இப்போது, நாட்டை ஆளும் மன்னன் எவ்வளவு உரிமை பெறலாம், என்று ஆகிவிட்டது.
பிரிட்டனிலே நடைபெற்ற பல சம்பவங்கள், சாட்சிகளாக்கப்பட்டன மன்னன் பணிந்த காட்சிகள் எடுத்-