பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

துக்‌ காட்டப்பட்டன. மக்கள்‌ சரணடைந்த சம்பவங்களும்‌ எடுத்துறைக்கப்பட்டன, அரசியல்‌ அடிப்படை பிரச்னைகள்‌ அலசப்பட்டன; நீதிபதிகள்‌ பாடு மிகவும்‌ சங்கடமாகிவிட்டது. மன்னன்‌ சார்பிலே வாதாடியவர்கள்‌, அரசர்‌களின்‌ பரம்பரை பாத்யதைகளைப்‌ பற்றி விரிவுறை ஆற்றினர்‌; ஐவருக்காக அல்ல! அல்ல! நாட்டுக்காக வாதாடியவர்கள்‌ அவர்கள்‌, ஆற்றலின்‌ பிறப்பிடமும்‌ உரிமையின்‌ ஊற்றிடமும்‌ மக்களே என்று வாதிட்டனர்‌.

மன்னன்‌, விசாரணையின்றி எவரையும்‌ காவலில்‌ வைக்கலாம்‌, என்று மன்னன்‌ சார்பினர்‌ உரைத்தனர்‌.

அது எங்ஙனம்‌ நீதியாகும்‌? குற்றமிழைத்தவனைத் தண்டிக்கத்‌ தான்‌, கொற்றவனேயன்றி, எவரையும்‌ எக்காரணமுமின்றிச்‌ சிறையில்‌ அடைக்க ஒரு கொற்றவனா! என்று மக்கள்‌ சார்பினர்‌ கேட்டனர்; துலாக்‌கோலினர்‌ துயருற்றனர்‌! வழக்கு, புதுமை நிரம்பியது மட்டுமல்ல, மக்களின்‌ மனதிலே புதியதோர்‌ உறுதியைக்‌ கண்டுவிட்ட பிறகு மன்னன்‌ யாது செய்யவேண்டும்‌ என்ற பிரச்னையை உள்ளடக்கியதாய்‌ விட்டது!

பிரிட்டன்‌ இனி, ஏதேச்சாதிகார ஆட்சிக்கு இரையாவதா? அல்லது மக்களின்‌ மாண்பினையும்‌ உரிமையையும்‌ மதித்து ஒழுகும்‌ மன்னராட்சிக்கு இருப்பிடம்‌ ஆவதா, என்பதே பிரச்னையாகிவிட்டது. சிலர்‌ அரசன்‌ பக்கம் தீர்ப்பளித்தனர்‌—சிலர்‌ மக்கள்‌ பக்கம்‌ தீர்ப்பளித்தனர்‌? சிலர்‌, அறநெறி நிற்கத்‌ துணிந்துவிட்டனர்‌, விடிவெள்ளி அழகுற ஒளிவிடுகிறது!

மன்னன்‌ தன்‌ இஷ்டப்படி யாரையும்‌ காவலில்‌ வைக்கலாம்‌, ஆனால்‌ காரணத்தை விரைவாகக்‌ கூறிவிடுவதே நல்லது — என்ற கருத்தை இந்த வழக்கு, கடைந்தெடுத்துத்‌ தந்தது. எனவே, மன்னனுடைய