57
தன் ஆதிக்கத்தை அளவிலும் முறையிலும், எதிர்க்கத் துணிந்தவர்களை விட்டுவைப்பது, தன் தத்துவத்துக்கே இழுக்கு என்று எண்ணிய மன்னன், எலியட் உட்பட, பல உறுப்பினர்களைச் சிறைப்படுத்தினான்—வழக்குத் தொடரப்பட்டது—வழக்குத் தொடராமல் நீண்ட நாள் சிறையில் வைத்திருப்பது சட்டப்படி சரியல்ல என்று ஏற்கனவே தீர்ப்பு இருக்கிறது! எனவே மன்னன், மாமன்ற உறுப்பினர்மீது குற்றம் சாட்டித்தான் தீரவேண்டும்.
மாமன்றத்தைக் கலைந்து செல்லும்படி. மன்னன் உத்திரவிட்டான பிறகு, மாமன்றத்தில் கூடிப் பேசியதுகலாம் விளைப்பதாகும்—எனவே, எலியட்டும், கண்டனம் தெரிவித்த மற்ற உறுப்பினர்களும் குற்றவாளிகள், என்று மன்னன் சார்பில் வாதாடப்பட்டது. எலியட்டும் மற்றவரும், ஜாமீனில் செல்லக்கூட மறுத்து, மாமன்றத்திலே நடைபெற்ற விஷயத்துக்காகத் தங்கள் மீது வழக்குத் தொடருவது சட்ட விரோதம் வாதாடினர். பன்னிரண்டு நீதிபதிகள்! ஏன் இந்த பதவியில் அமர்ந்தோம் என்று எண்ணிக் கவலைப்பட்டனர். ஒருபுறத்தில் மன்னன் உருட்டி மிரட்டிப் பார்க்கிறான், மற்றோர் புறத்திலேயோ, மாமன்றம் முழக்கமிடுகிறது! இந்த வழக்கில், எந்த பக்கம் தீர்ப்பளித்தாலும், தொல்லை தாக்கும்! எனவே நீதிபதிகள் குழப்பமடைந்தனர், மன்னன் எந்த அளவுக்கு செல்லத் துணிந்திருக்கிறான் என்பதை எடுத்துக் காட்ட விரும்பி, வழவழவென்று பேசிய தலைமை நீதிபதி வேலையினின்றும் நீக்கப்பட்டான்! நீதி கண்டறிய அல்ல, மன்னன் நினைப்பு அறிந்து நடப்பதற்கே நீதிமன்றம்! கேலிப்பொருள்!! எலியட்டும் பிறரும் தண்டிக்கப்பட்டனர். சிறையில் தள்ளப்பட்டனர். நீதிக்காகவும் நேர்மைக்காகவும், மக்கள் உரிமைக்காகவும், மாமன்றத்தின்