பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

மளிக்கும்‌ திட்டங்கள்‌, கேவலத்‌ தோல்விகளைத்‌ தரும்‌ சண்டை சச்சரவுகள்‌, பணவிரயம்‌, மிரட்டி நீதிமன்றங்களை ஒதுக்குவது, மாமன்றத்தை ஆள்காட்டி விரலால்‌ ஆட்டிப்படைக்க எண்ணுவது, உரிமை கேட்பவர்களைச்‌ சிறையில்‌ தள்ளி சாகடிப்பது, கொள்ளை அடிப்பதுபோல வரிகளைக்கொண்டு கொடுமை செய்வது, ஒன்று இரண்டா மன்னன்‌ செய்யும்‌ கொடுமைகள்‌, எத்தனை காலத்துக்கு இதனைத்‌ தாங்கிக்கொள்வது, எப்படிக்‌ தாங்‌கிக்கொள்வது? என்று மக்கள்‌ மனம்‌ நொந்து கேட்டனர்‌ மன்னனோ, மக்களை எப்படி ஆளவேண்டும்‌ என்பது எனக்கல்லவா தெரியும்‌, மாமன்றம்‌ அறியுமா அந்தத்‌ திறமையை, ஆண்டவன்‌ எனக்கல்லவா, ஆளும்‌ உரிமையை, வரத்தை, அருளியிருக்கிறார்‌! என்று கேட்டான். புண்ணைக் காட்டினர் மக்கள், மன்னன் அதிலே வேல்சொருகினான்.

பதினோராண்டுகள்‌, சார்லஸ்‌ மாமன்றத்தைக்கூட்டாமலேயே ஆண்டான்‌. மக்களின்‌ கருத்து அறிய மாமன்றம்‌ மக்களின்‌ உரிமையைக்‌ கண்டறிய மாமன்றம்‌! தவறும்‌ மன்னனைத்‌ திருத்த மாமன்றம்‌! இது நாடு கொண்டிருந்த கருத்து. மன்னனோ, “மாமன்றம்‌! அது இல்லாமல்‌ ஆட்சி நடத்த முடியாமலா போகிறது. பார்ப்போம்‌” என்று சூளுரைத்தவன்‌ போலானான்‌—சுகபோகிகள்‌ அவனைப்‌ புகழ்ந்தனர்‌—ஆதிக்கம்‌ புரியும்‌ நோக்கம்‌ கொண்டவர்கள்‌ அடுத்துக்‌ கெடுப்பவர்கள்‌, மக்களை மாக்களென்று எண்‌ணும்‌ மமதையாளர்கள்‌, ஏழையின்‌ கண்ணீரையும்‌ எளியோரின்‌ இரத்ததையும்‌ கண்டு மனம்‌ இளகாத கொடுமையாளர்கள்‌, மன்னனுக்குப்‌ பக்கமேளம்‌ கொட்டினர்‌, பதினோராண்டுக்காலம்‌ ராச நர்த்தனம்‌ நடைபெற்றது. சிறையின்‌ பசி தீருமளவுக்கு உணவு தரப்பட்டது! ஏன்‌ என்று கேட்பவன்‌, இழுத்துத்‌ தள்ளப்படுவான்‌ பதினோ-