பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ராண்டுகள்‌. மன்னன்‌ தன்‌ பரிவாரத்தின்‌ துணைகொண்டு, நாடாண்டான்‌—மாமன்றம்‌ அழைக்கப்படவில்லை, மக்‌களைக்‌ கவனிக்கவில்லை கேட்கும்‌ வரியைத்‌ ‘தரவேண்டும்‌’ காட்டும்‌ சிறையில்‌ புகவேண்டும்‌! மன்னன்‌ கூறுவது தான்‌ சட்டம்‌, அவன்‌ கொடுப்பதுதான்‌ நீதி! உரிமை, சாசனம்‌, உடன்படிக்கை, ஏற்பாடுயாவும்‌ வெற்றுரைகள்‌! வீணரின்‌ கற்பனைகள்‌! அரசன்‌ ஆண்டவன்‌ அம்சம்‌! அவனை எதிர்ப்பது நாத்தீகம்‌!! இந்த முறையிலே, பதினோராண்டுகள்‌ சென்றன!

மக்கள்‌ இந்த நாட்களிலே பெரும்‌ புரட்சி எதும்‌ செய்யவில்லை, அரசனைத்‌ தாக்க முயற்சிக்கவில்லை, அரண்மனையைத்‌ தாக்கக்‌ கிளம்பவில்லை, அதிகாரிகளை அடித்துக்‌ கொல்லவில்லை, மாளிகைகள்‌ மீது போர்‌ தொடுக்கவில்லை! எனவே, மக்கள்‌ அடங்கிக்கிடக்கிறார்கள்‌ என்று ஆதிக்க வெறிகொண்ட அதிகாரிகள்‌ கருதினர்‌, மன்னனோ, “இதுதான்‌ மக்கள்‌ இயல்பு! மன்னன்‌ ஆள்‌வதைத்தான்‌ அவர்கள்‌ விரும்புவர்‌, அவர்களுக்குகத் தெரியும்‌, மன்னன்‌ என்றால்‌ அதற்கு உள்ள மகிமை, மாமன்றம்தான்‌ மக்களிடம்‌ மயக்கமொழி பேசிக்‌ கெடுத்து வந்தது. இப்போது மாமன்றம்‌ இல்லை, எனவே மக்கள்‌ மனதிலே தவறான கருத்துக்கள்‌ தோன்றுவதுமில்லை” என்று எண்ணிக்கொண்டான்‌. பெரும்‌ புயலுக்கு முன்பு காணப்படும்‌ அமைதி இது என்று எண்ணத்‌ தோன்றவில்லை. குறிகளைக்‌ கண்டு குணத்தை அறிந்து கொள்ளும்‌ திறன்‌ இல்லை, பதினோராண்டுகள்‌, மாமன்றம்‌ இன்றி, மன்னன்‌ ஆண்டான்‌, ஆனால்‌ மாமன்றம்‌ மாண்டு போகவில்லை, மக்கள்‌ மனதிலே இருந்துவந்த உரிமைவேட்கை மடிந்துவிடவில்லை, மாறாக, அந்த வேட்கை, அடக்க வலுத்தது.

பக்கிங்காம்‌ இறந்ததால்‌ ஏற்பட்ட ‘காலி’யைப்‌ பூர்த்திசெய்ய பிரபுக்கள்‌ சிலர்‌ கிடைத்தனர்‌, அவர்களின்‌