பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

இதல்லாமல்‌, கப்பல்வரி, ஒரு முறைக்கு மூன்று முறை வசூலிக்கப்பட்டது—இலண்டன்‌ நகரில்‌ மட்டும்‌, 104,000 பவுன்‌ திரட்டமுடிந்தது.

மூன்றாவது முறையாகக்‌ கப்பல்‌ வரி விதிக்கப்பட்ட போது, ஹாம்டன்‌. வரி கட்ட மறுத்தான்‌. ஒரு பவுன்‌ தான்‌ வரி, எனினும்‌ மாமன்றம்‌ ஏற்காமுன்னம்‌ போடப்‌பட்ட வரியை செலுத்த முடியாது என்று கூறினான், வழக்குத்‌ தொடரப்பட்டது; சிக்கல்‌ வளர்ந்தது, நீதிபதிகளுக்கு!

“மன்னனுக்கு, இவ்விதம்‌ வரிவிதிக்க அதிகாரம்‌ உண்டா?”

“உண்டு”

“மாமன்றத்தின்‌ இசைவு பெற்றல்லவா மன்னன்‌ வரிவிதிக்க வேண்டும்‌ — அதுதானே முறை. பலகாலும்‌ இருந்துவந்த ஏற்பாடு.”

“பொதுவாக அதுதான்‌ முறை—ஆனால்‌ கப்பல்‌ வரி, எல்லா வரிகளையும்‌ போன்றதல்ல. நாட்டுக்கு ஆபத்து நேரிடும்போது, மன்னன்‌, அந்த ஆபத்தைத்‌ தடுக்க, கடற்படையைத்‌ திரட்டவேண்டும்‌—அது அவர்‌ கடமை, உரிமை—அதற்காகும்‌ பெரும்‌ செலவை நாட்டு மக்களிடம்‌ அவர்‌ வசூலிக்க, உரிமை பெற்றிருக்கிறார்‌. கப்பல்‌ வரி, இந்த வகையைச்‌ சார்ந்தது, எனவே மாமன்றத்தைக் கலந்து தீரவேண்டுமென்‌பதில்லை.”

“சரி, நாட்டுக்கு ஆபத்து என்ன இப்போது? போர் இல்லை, எதிரியின்‌ கலங்கள்‌ எந்தக்‌ கடலிலே உள்ளன?”

“அதெல்லாம்‌, மன்னர்‌ அறிவார்‌”

“மன்னருக்கு மட்டும்தான்‌, எது ஆபத்து என்பதை

5