பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சரியாகக்‌ கிடையாது, போர்வீரருக்கு; பாசறைச்‌ செலவுக்‌குப்‌ பணம்‌ இல்லை, அவர்களுக்குச்‌ பம்பளம்‌ சரிவரத்தரப்படுவதில்லை, இந்நிலையில்‌ எப்படிப்பட்ட குணமுடையவர்கள்‌ படையில்‌ சேருவர்‌, சேர்ந்த பிறகு அவர்கள்‌ குணம்‌ மேலும்‌ எப்படிக்கெடும்‌! ஓநாய்கள்‌ போலாயினர்‌ மன்னன்‌, தனிப்பட்டவர்களின்‌ வீடுகளிலே, இந்தப்‌ படை வீரர்கள்‌, கட்டாய விருந்தினராக இருக்கலாம்‌, என்று அனுமதித்தான்‌.

கண்ணியமான குடும்பம்‌, கடைவைத்துப்‌ பிழைக்‌கும் குடும்பம்‌, சிறு பண்ணை வைத்துப்‌ பாடுபடும்‌. குடும்பம்‌, இங்கெல்லாம், பதின்மர்‌ இருபதின்மர், ஐவர்‌, நால்வர், அறுவர்‌, இதுபோலப்‌ புகுவர்‌, படைவீரர்கள்‌. விருந்தளிக்க வேண்டும்‌, பணிவிடை செய்யவேண்டும்‌, வேண்டும் பொருளைத்‌ தரவேண்டும்‌; வெறியாட்டமாடுவர், அதனை வேடிக்கையாகக் கருதிக்கொள்ள வேண்டும், கன்னியரைக் கட்டித் தழுவுவர்‌ முதியவரை எட்டி உதைப்பர்‌, கதவுகளைத்‌ தூளாக்குவர் கண்ணாடிச்சாமானை உடைப்பர், காகூவெனக் கத்துவர்‌ அதனை இசை என்று கொள்ளவேண்டும்! நாடு தாங்கிக் கொள்ளுமா? நல்லாட்சியில்‌ இங்ஙனம்‌ நடைபெறுமா? சர்க்காரிலேயோ சம்பளம்‌ சரிவரத்தரப்படுவதில்லை, எனவே சிப்பாய்கள், சீரழிந்த குணத்தினராயினர்‌, குடும்பம் பல கொடுமைக்கு ஆளாயின! முதியவர்‌ கண்ணீர்‌ சொரிந்தனர்‌; வாலிபர்‌ சச்சரவிட்டுச்‌ சித்திரவதைக்கு ஆளாயினர்‌; கன்னியர்‌ கற்பிழந்தனர்‌; நாடு மதிப்பிழந்தது. மன்னன்‌ இந்தக் காட்டு முறையைப் புகுத்துவதால் விளையும்‌ கேடுபற்றி எண்ணிப்பார்க்கவுமில்லை. மன்னன்‌ அமைத்துள்ள படையைக்‌ காப்பாற்ற வேண்டியது மக்கள்‌ கடமை என்று கருதினான்‌, இந்த