பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

லாட்‌ நடந்துகொள்ளும்‌ முறை பிடிக்கவில்லை, வேற்றுமையை வெளியிட்டார்‌!

பொறி தெரியும்போதே அழித்துவிடுவதல்லவா, லாட்‌ கையாண்ட முறை; அப்படிச்‌ செய்தால்தானே, பெரு நெருப்பு மூளாது என்று கருதினார்‌. எனவே, வில்லியம்ஸ் கொண்டுவரப்பட்டார்‌, வழக்கு நடந்தது. தயாரிக்கப்பட்ட தீர்ப்பு படிக்கப்பட்டது, பத்தாயிரம்‌ பவுன்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டது; சிறையும்‌ கூடச்சேர்த்து!

வில்லியம்ஸ்‌, சிறையில்‌ இருக்கும்போது, அபராதத்தை வசூலிப்பதற்காக அவர்‌ இல்லத்தில் அரசாங்க அலுவலர்கள்‌ புகுந்து, சாமான்களை எடுத்தனர்‌, அப்போது வில்லியம்சுக்கு வந்த கடிதங்கள் சில கைப்பற்றப்பட்டன.

ஒரு ஏழை ஆசிரியர்‌, வில்லியம்சுக்கு, எப்போதோ எழுதிய கடிதங்கள்‌ அவை. “இந்த அற்பனை” “இந்தப்‌ பஞ்சை” — என்று அக்கடிதத்தில்‌ யாரைப்‌ பற்றியோ குறைகூறி அந்த ஆசிரியர்‌ எழுதியிருந்தார்‌. இது, லாட்‌ பற்றித்தான்‌ எழுதப்பட்டது; எனவே சட்ட விரோதமான கடிதம்‌—எழுதினவர்‌, கடிதம்‌ பெற்றவர்‌ இருவருக்கும்‌ கடுந்‌தண்டனை விதிக்கவேண்டும்‌ என்று உத்திரவு பிறந்தது, அதற்காக ஒரு எட்டாயிரம்‌ பவுன்‌ அபராதம்‌ வில்லியம்சுக்கு. ஆசிரியரை அவர்‌ பள்ளிக்கு எதிரிலேயே, நிறுத்தி, தொழுவத்தில்‌ மாட்ட உத்தரவாயிற்று. கொடுங்‌கோல்‌ மன்னன்‌ போலக்‌ கடும்புலியும்‌ கேடு செய்யாது என்று எண்ணிய ஏழை ஆசிரியர், நாட்டைவிட்டே ஓடிவிட்டார்.

அனைவரும்‌ அந்த ஏழை ஆசிரியர்போல இல்லை; சித்தம் குழம்பவில்லை.