பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மார்க்கத்‌ துறையிலே, மன்னன்‌ வற்புறுத்திய முறைகளை ஏற்க, ஸ்காத்லாந்து மக்கள்‌ பிடிவாதமாக மறுத்து விட்டனர்‌. “என்‌ ஆணைக்கா எதிர்ப்பு” என்று மன்னன் ஆர்ப்பரித்தான்‌. “எமது கொள்கையை இழக்கமாட்‌டோம்‌” என்று மக்கள்‌ முழக்கமிட்டனர்‌. மன்னன்‌, “போர்” என்றான்‌, மக்கள்‌ “தயார்‌” என்றனர்‌! மன்னன்‌ தான்‌ தயாராக முடியவில்லை, பணமில்லை!!

ஆண்டொன்றுக்கு 835,000 பவுன்‌ தேவை என்றனர் படைத்தலைவர்கள்‌. 30,000 பேர்‌ வீரர்களாவது தேவை, மலைவாசிகளான ஸ்காத்லாந்துக்காரரை முறியடிக்க! இந்தப்‌ பெருந்தொகையைப்‌ பெறுவது எங்ஙனம்‌? பழைய சங்கடம்‌ மீண்டும்‌ தலைதூக்கிற்று. சூள்‌ உரைத்துவிட்டான்‌ மன்னன்‌, ஸ்காத்லாந்துக்காரரை அடித்து நொறுக்கி அறிவு புகட்டுவதாக; பணம்‌? மன்னன், திண்டாடினான்‌.

அங்கே, ஸ்காத்லாந்தில்‌, தாயகத்தைக்‌ காக்க வீரப்படை திரண்டுவிட்டது. பல ஆண்டுகள்‌, ஸ்வீடன்‌ நாட்டிலே போர்ப்பயிற்சி பெற்றுச்‌ சிறந்து விளங்கிய லெஸ்லீ என்பான்‌, தாயகத்துக்கு ஆபத்து என்பதறிந்து வெளிநாட்டிலிருந்து, தாயகம்‌ வந்து சேர்ந்தான்‌, தணலென்று ஆகிவிட்டது, வீரம்‌; எண்ணற்ற வீரர்கள்‌! எதற்‌கும்‌ அஞ்சாத துணிவு! மக்கள்‌, பெண்டிர்‌ உள்பட, படை எடுப்பை முறியடிக்கக்கூடும்‌ பணியாற்றினர்‌.

ஸ்காத்லாந்து நாட்டுப்‌ பிரபுக்களில்‌ ஒருவர்‌, ஹாமில்டன்‌—இவர்‌ சார்லஸ்‌ சார்பில்‌.

இவர்‌ ஒரு பிரிவுப்படையுடன்‌ ஸ்காத்லாந்து செல்வது என்றால்‌, வேறோர்‌ பிரிவு வேறு பக்கமிருந்து செல்வது என்றும்‌ ஏற்படலாயிற்று. ஹாமில்டன்‌ சென்றார்‌, தாயகத்‌தின்‌ போர்க்கோலத்தையே கண்டார்‌! காலடி எடுத்து