பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நிலைமையை கே.ஆர். சீனிவாச ஐயங்கார் என்ற அறிஞர் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிருர்:

'தங்கள் கணக்கிற்கு, நாள் ஒன்றுக்கு ஒரு கொல், மூன்று கொள்ளைகள், குழந்தைகளை அல்லது ஆள்களைக் கடத்துகிற வேலைகள் ஐந்து என்று கீர்த்தி பெற்றுள்ள 300 கொள்ளைக்காரர்கள் மீண்டும் தங்கள் தொழிலில் ஈடுபட்டி ருப்பதுபற்றி நான் படித்தேன். மூன்று நாட்களுக்கு ஒரு தற்கொலையும், தினசரி ஒரு தற்கொலை முயற்சியும் நிகழ்வ தாகவும் படித்தேன். ஒரு தாய் தனது இரண்டு பிள்ளை களையும் கிணற்றுக்குள் வீசி விட்டு தானும் விழுந்து இறந்த தையும் படித்தேன். மிகவும் மோசமான முறையில் கொலை', நிகழ்கிற செய்தி தினந்தோறும் வருகிறது. ஆள்து.ாக்கிகள் கள்ளக் கடத்தல்காரர்கள், போதை மருந்துப் பேர்வழிகள், நகர விடாது தடுத்துத் தொல்லை தருபவர்கள், பலவந்த மாய் பணம் பறிப்பவர்கள், கூலிக்குக் கொலை செய்வோர் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிரு.ர்கள் என்பது உண்மையின் ஒரு பகுதி ஆகும். கோஷ்டி யுத்தம், மர்மக் குழுக்களின் குற்றச் செயல்கள், பரஸ்பரம் அரசியல் அவதூறுகள்- கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், ஏச்சுக்கு ஏச்சு- போன்ற நியதிகள் முடிவில் மனிதகுலம் முழுவதும் குருட்ராய், பல்லற்றவராய், மனம் இல்லாதவர்களாய் மாறிவிடுகிற நிலையில் கொண்டு சேர்க்கும்.'

தற்கால வாழ்க்கைச் சீரழிவுகளையும் பண்பாட்டுச் சிதைவையும் கண்டு கவலையோடு சிந்திக்கிறவர்கள், இந்நாடு என்றும் இதே நிலைவில் இருந்ததில்லை என அறிவர். அனுபவசாலிகள் தாங்கள் அறிந்த பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்வதும் இயல்பு. - -

-இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு நாள். ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவர் கூட்டம் ஒன்று நடந்து

கொண்டிருந்தது. உலக மகாயுத்தத்திற்குப் பிந்திய காலம்

9