பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சீர்குலைக்கும் சினிமா

'சமூகப் பிரக்ஞையை மழுங்கடிப்பதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் திரைப்படம் பத்திரிகைகள்,தொலைக் காட்சி, நவீனங்கள், நகைச்சுவை வெளியீடுகள் போன்ற எண்ணற்ற சாதனங்களின் பித்தலாட்டங்களுக்கு படிக்காத வர்களும் சரி, அரைகுறையாகப் படித்தவர்களும் சரி, உயர் கல்வி கற்றவர்களும்கூட சுலபமாக இரையாகி விடுகிரு.ர்கள்.

  • இன்று, ஆண்டுதோறும் 1,200 கோடி முதல் 1,300 கோடிப்பேர் மொத்தத்தில் திரைப்படங்களுக்குச் செல்கின்றனர். கணக்கற்ற கோடி வானெலி நேயர்களும், தொலைக்காட்சி நேயர்களும் இருக்கின்றனர். கலாசார சாதனைகளை ஊர் உலகமெங்கும், பட்டிதொட்டியெங்கும். பரப்பும் இந்த சாதனங்கள் பிரம்மாண்டமாக வளர்ந் திருப்பது நாகரிகத்துக்கு ஒரு மாபெரும் ஆதாயம் என்பதில் ஐயமில்லை. இப்போது ஒரு கலைஞன் என்றுமில்லாத வாறு எண்ணற்ற கோடி ரசிகர்களை அல்லது வாசகர்களை எட்டமுடியும். தகவல் சாதனங்கள் இவ்வாறு பெரிதும் வளர்ச்சி அடைந்திருப்பதைத் தொடர்ந்து,கலைப்படைப்புகள் அளிக்கும் கலாசார மற்றும் உணர்ச்சிகரமான அனுபவத்தில் கோடானுகோடி மக்கள் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

'ஆனல் கலாசார மதிப்புகளைப் பரப்பும் இந்த சாதனங் கள் யாவும் ஒரு சில ஏகபோகங்களின் கைகளில் இருக் கின்றன. இந்த ஏகபோகங்கள் இவற்றை இரண்டு நோக்கங் களுக்காகப் பயன்படுத்துகின்றன. முதலாவதாக. மக்களின்

17: