பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டும் இருக்கிறது என்று சொல்லலாம். நமது சமுதாயம் எப்படி உட்புறத்தில் அழுகிக் கொண்டு வருகிறது என்பதற்கு இந்த சினிமாக்கள் நல்ல உதாரணங்களாகின்றன.”

இவ்வாறு, தேசபக்தியும்,சமுதாய உணர்வும், சிந்துனேத் திறனும் நிரம்பப் பெற்றிருந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான அறிஞர் வெ. சாமிநாத சர்மா 45 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார்.

பின்வந்த வருடங்களில் நம் நாட்டின் சினிமா, கலைத் துறையில் முற்போக்குப் பாதையில், சிறப்பான வளர்ச்சி எதுவும் பெற்றுவிடவில்லை. அது நசிவுப் பாதையில் மேலும் மேலும் முன்னே செல்லவும், மக்களின் பண்புகளையும் மனசையும் சீர்குலைக்கவும் மேலைநாட்டுப் படங்கள் துணை புரிந்திருக்கின்றன. இன்னும் அப்படியே வழிகாட்டி வரு கின்றன.

மக்கள் அதிகமாகப் பார்க்கிற திரைப் படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சித்திரங்களாக இல்லை. வாழ்க்கைச் சிக்கல்களை, சமூகப் பிரச்சினைகளை, நாட்டின் நிலைமைகளே எடுத்துக் காட்டுவது, அவற்றை எப்படி எதிர் கொண்டு, மனிதர்கள் தன்னம்பிக்கையோடு சமாளிக் கிரு.ர்கள் என்பது போன்ற எதையும் அவை விளக்குவதில்லை. மக்களுக்கு சிந்தனை விழிப்போ அறிவு வளர்ச்சியோ ஒரு சிறிதும் அவை ஊட்டுவதில்லை; ஊட்ட முயல்வதுமில்லை.

மாருக, அபத்தமான கதைப் போக்கும், ஆபாசமான வசனங்களும், அருவருக்கத்தக்க ஆட்டங்களும் பாட்டுகளும் பண்பற்ற பாணியும் கொண்ட மட்டரகப் படங்களே பெருகியுள்ளன. மேலை நாட்டுப் படங்களில் சகஜமாகக் காணப்படுவது போன்ற கற்பழிப்புகளும், வன்முறைகளும், கொலைகளும் கொள்ளைகளும், செக்ஸ் கவர்ச்சி மிகுந்த நடனங்களும் நம் நாட்டின் படங்களிலும் அதிகம் அதிக மாக இடம் பெற்று வந்திருக்கின்றன.

இந்தப் போக்கு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுகிற போது படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் சுலப

ம. ச-2 3 #