பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கிரக் கேளிக்கைகளுக்கு ஈடு தந்து இளகிக் கொடுக்கும் பெண் உடலின் வெவ்வேறு அங்கங்களின் நெகிழ்ச்சி மற்றும் இறுக்கம் மூதலியவற்றை திறமையாகவும் சாமர்த்திய மாகவும் காமிரா படம் பிடித்துக் காட்டுகிறது என்று ஒரு பத்திரிகை வியந்து பாராட்டியுள்ளது.

இந்த ரகமான வன்முறை, செக்ஸ், திகில், கொலை நிகழ்ச்சிகள் நிறைந்த படங்கள் டி. வி. மூலமும் வீடியோ மூலமும் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. இவற்றை எண்ணற்ற மக்கள் பார்த்து காலக்கொலை செய்கிரு.ர்கள். அவர்கள் மனம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சிறுவர்கள் விளையாட்டாகவும், வேடிக்கையாகவும்-சினிமாவிலும் டி. வி.யிலும் வருவது போல் நாமும் செய்து பார்ப்போமே என்ற உந்தலினலும்-துப்பாக்கியினல் சுடுகிரு.ர்கள்: சித்திரவதை செய்து மகிழ்கிரு.ர்கள். கற்பழிப்பு விளையாட் டிலும் களிவெறி கொள்கிருர்கள்,

சராசரி அமெரிக்கச் சிறுவர் சிறுமியர், தங்களுடைய 14 வயதை அடைவதற்குள், 11,000 கொலைகளைப் பார்க்கிரு.ர்கள். தி ைர யி லே த ர ன். பிரிட்டனில் திரையில் ஒரு மணிக்கு 4 பயங்கர வன்முறை நிகழ்ச்சி வீதம் காட்சிப்படுத்தப்படுகின்றன. உச்சவேளை நிகழ்ச்சி களில் டி.வி.யில் மணிக்கு 75 செக்ஸ் காட்சிகள் நிழலிடு கின்றன.

இப்படி நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை ஒரு சமயம் கணக்கிட்டிருந்தது. அது 1970 களின் பிற்பகுதியில், இப்போது இந்தக் கணக்கு வெகு வேகமாக உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவில், ஏதேனும் ஒரு தீவிரக் குற்றம் ஒவ்வோர் இரண்டரை விடிைகளுக்கும், திருட்டு ஒவ்வொரு 4. 8 விடிைகளுக்கும், கற்பழிப்பு ஒவ்வொரு 7 நிமிடத் திற்கும், கொலை ஒவ்வொரு 24 நிமிடத்திற்கும் நடைபெறு கிறது என்று அமெரிக்கன் நியூஸ் அண்ட் வொர்ல்ட் ரிப்போர்ட் 1984-ல் கணக்கிட்டுள்ளது.

器等