பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும், எல்லா பதிப்பகத்தார்களும் பிசினஸ் என்ற சுழலில் சிக்கி உழல்கிருர்கள் என்று சொல்வதற்கில்லை. லட்சிய நோக்கும் கொள்கைப் பிடிப்பும் உள்ள பிரசுரகர் களும் இருக்கத்தான் செய்கிருர்கள். இவர்கள் தங்களுக்கென சில கொள்கைகள்-ஆன்மிகம் அல்லது வேறு ஏதாவதுவைத்திருக்கிருர்கள். தங்கள் தொழிலின் தனிப்பெரும் நோக்கம் லாபம் தான் என்று இவர்கள் கருதுவதில்லை. ஆளுல், தகுதி படைத்தவர்களே வெற்றி பெறுவார்கள் என்பதை நியதியாகக் கொண்டுள்ள வாழ்க்கைப் போராட்டத்தில் இத்தகையவர்கள் பின்தங்கியே காணப் படுகிருர்கள்.

இந்தவித வேலைத் தனங்கள் தமிழ் பத்திரிகைகள், நாவல் வெளியீடுகளில் மட்டும் தான் நடத்து கொண்டிருக் கின்றன என்றில்லை, அண்டை மாநில மொழிகளிலும் இந்தரக நச்சுவேலைகள் வணிக நோக்குடன் தாராளமாகவே நடைபெறுகின்றன. இதை பிறமொழி வாசகர்களின் பேச்சுக்கள் மூலமும், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப் படுகிற கட்டுரைகள் மூலமும் அறிய முடிகிறது.

இவை அனைத்தும் மேலே நாட்டிலிருந்து இறக்குமதி யாகிற நசிவுக் கலாசாரத் தொத்து நோய்க் குணம் தான் என்பது இந்தரக எழுத்துக்களின் தன்மைகளிலிருந்து எளிதில் புலகுைம்.

அனைத்து மாநிலங்களிலும் மண்டி வளர்கிற இந்த நாசகாரப் போக்கை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடுமையான எதிர்ப்பு உருவாகி வளர்ந்து வருகிறது என்பதையும் குறிப்பிடத் தான் வேண்டும்.

கலாசாரச் சிதைவு என்ற நோய் மேற்கிவிருந்து இந்தி யாவுக்குள் புகுந்து, நாடு நெடுகிலும் பரவி விட்டது. நம் நாட்டின் வாசகர்களில் பெரும்பாலோர் இந்த நோயை இனம் காணத் தவறியிருக்கலாம். என்ருலும், இந்த நோயின் கிருமிகள் நம் நாட்டின் பெருமையை, அதன் சுயத்

3 I