பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மையை, நாட்டு மக்களின் ஆக்கசக்திகளை உள்ளுற அரித்து உறிஞ்சி நம்மை பலவீனர்களாக்கி வருகிறது என்பது உண்மையாகும்.

இப்படி எல்லாம் எழுதுகிறவர்களும், அவர்களே எழுதும் படி தூண்டுகிறவர்களும், வாசகர்கள் இவைகளைத் தான் விரும்புகிரு.ர்கள். வாசகர்களுக்குப் பிடித்தமான விஷயங் களே நாங்கள் சப்ளை செய்கிருேம் என்று துணிந்து சொல் கிருர்கள்.

மக்களே நச்சுக்கலையின் போதை மயக்கத்தில் ஆழ்த்தி, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே நாங்கள் இப்படிச் செய்கிருேம் என்று, அச்சிட்ட கவர்ச்சித் தாள் களின் வணிகமுதலாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏவல் புரியும் சொல் வாணிபர்களில் எவரும் வெளிப்படையாகக் கூறத் துணிவதில்லை. ஆனல் உண்மை அதுதான்.

எனக்கு பணம் தேவை. ஸ்பீரியஸ் இலக்கிய எழுத்து பணமோ உரிய கவனிப்போ பெற்றுத் தந்ததில்லை. கிளு கிளுப்பூட்டும் இந்த ரக எழுத்துக்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனக்கும் ஆயிரக்கணக்கில் பணம் கிடைக் கிறது. நான் பணத்துக்காகத்தான் எழுதுகிறேன்' என்று ஒன்றிருவர் வெளிப்படையாக அறிவிப்பதும் நிகழ்கிறது. இது அபூர்வ கேஸ்.

மற்றவர்கள் எல்லோரும், நாங்கள் வாழ்க்கையை சித்திரிக்கிருேம், மனித உறவுக்கலையை கற்றுக் கொடுக் கிருேம், காவிய ரீதியில் இலக்கிய நயமாகத்தான் எழுது கிருேம், புதுமை பண்ணுகிருேம் என்று கூசாமல் அளக் கிரு.ர்கள்.

மேலேநாடுகளின் நச்சுக் கலாசாரப் போக்கில் வளர்ந்து வருகிற திரைப்படங்களைப் போலவே, இந்த நச்சு எழுத்து மற்றும் நசிவுக்கலைப் பத்திரிகைகளும் புத்தகங்களும் பண் படாத உள்ளங்களையும் பிஞ்சு மனசுகளையும் தீய முறையில் பாதித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் பெருகி வருகிற

32