பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் பண்ணுவதே குறியாக இருக்கிற முதலாளி வர்க்கத்தினர் வியாபார நோக்குடன் பெண்களை எப்படி எப்படி எல்லாமோ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் சகல பொருள்களின் விளம்பரங்களுக்கும் கவர்ச்சி சக்தியாகப் பயன்படுத்தப்படுகிரு.ர்கள். திரைப்படங்களிலும் பத்திரிகைக் கதைகளிலும், அவற்றுக்கான சித்திரங்களிலும், நாவல்களிலும் பெண்கள் கவர்ச்சி சாதனங்களாகவே இடம் பெறுகிரு.ர்கள். -

நாகரிக நகரங்களின் கேளிக்கை விடுதிகளில் நிர்வாணத்தை வெளிச்சமிட்டுப் பணம் சம்பாதிக்கும் கருவி களாகப் பெண்கள் ஆட்டுவிக்கப் படுகிருர்கள். விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிருர்கள். t -

பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளே ஒவ்வொன்ருய் அவிழ்த்தெறிந்தபடி ஆடுவதும், முடிவில் முழு அம்மணமாய் காட்சி தருவதும் கலநடனம் என்ற பெயரில்-பணம் பறிக்கும் பிசினஸ் ஆக-நடைபெறுகின்றன.

பொது மேடையில் இப்படி ஆடுவதைப் பணம் கொடுத்துப் பார்ப்பதில் திருப்தி அடையாதவர்களுக்கென்று தனி இடத்தில் தனியாக நின்று எட்டிப் பார்க்க உதவும் ஒரு துவாரத்தின் வழியாக, அறைக்குள்ளே அழகி ஆண்ட அவிழ்த்து அலங்கோல போஸ்கள் கொடுப்பதைப் பார்ப்ப தற்கும் வசதிகள் செய்து வைக்கிரு.ர்கள் அந்த பிசினசில் ஈடுபட்டிருப்பவர்கள்.

கலாசாரப் பயணம் என்றும், உலகச் சுற்றுலா என்றும் போகிறவர்கள் இவற்றை எல்லாம் கண்டு களித்துப் பின் ரசமான அனுபவங்கள் எனப் புத்தகங்களில் எழுதுகிருர்கள். இவை பற்றி தங்கள் பத்திரிகைகளில் சுவாரஸ்யமாக எழுதி, பத்திரிகைகளின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத் துடன், எழுதத் தெரிந்த சொற்கூவிகளையும், பணத்துக்காகப் படம் தீட்டுவோரையும் அனுப்பி ஏற்பாடு செய்கிரு.ர்கள், வணிகப் பத்திரிகையாளர்கள்.

ம.ச.க-3 37