பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுவதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதையே இந்தவிதச் செயல்கள் எடுத்துக் காட்டு கின்றன. பெண்கள் இழிவு படுத்தப் படுகிருர்கள். ஒரு சிலர் மிகுதியாகப் பணம் பண்ணுவதற்காக பெண்களின் உடல்கள் வாணிபப் பொருள்களாக மாற்றப்படுகின்றன என்பது எளிதில் புலனுகும்.

மேற்கத்திய சமுதாயத்தில் விபசாரம் ஒழுங்குபடுத்தப் பட்ட ஒரு தொழிலாகவே நடந்து வருகிறது. அத்தகைய சமூக அமைப்பின் தாக்கமும் செல்வாக்கும் நமது வாழ்க்கை முறைகளிலும் ஊடுருவியிருப்பது தெளிவாகத் தெரியக் கிடக்கிறது. நமக்காக நாமே ஏற்படுத்தியுள்ள சட்ட திட்டங்களுக்கும் மேலாக-பல விதமான தடைகளையும் மீறிக் கொண்டு-அவை ஆட்சி செலுத்துகின்றன.

இது ஒரு நோய் அல்ல. நோயின் சின்னமே ஆகும். பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றும், பணம் பண்ணுவதற்கு உபயோகமாகக் கூடிய சாதனங்கள் என்றும் மதிக்கப் படுவது இதையே காட்டுகிறது.

லாப நோக்கு மட்டுமே மேலோங்கி, இதர நோக்கங்கள் அனைத்தும் புறத்தே ஒதுக்கி வைக்கப்படுகிற போது, பெண்களை வாணிபப் பொருள்களாகப் பயன்படுத்துவதற்கு முதலாளித்துவம் தயங்குவதேயில்லை. அழகு மங்கையர் அனைத்து ரக விளம்பரங்களிலும் உடல் வெளிச்சமிடுகிரு.ர்கள். அவர்களை ஆடைக் குறைப்பு செய்து திரைப்படங்கள் பெரிதாகக் காட்டுகின்றன; பத்திரிகைகள் பெண்களை அழகிய அட்டைப்படங்களாக மாற்றி விடுகின்றன. இதெல்லாம் ஓர் அலங்கார வேலைப்பாடு மாதிரி அமைந்து போகிறது. அதாவது, சாதாரண மக்கள் அதன் அடிப்படை அம்சத்தை கண்டு உணரத் தவறி விடுகிருர்கள்.

பெண்களும் மனித சாதியின் பகுதியேயாவர். அவர் 'களும் சமூகத்தில் ஆண்களைப் போலவே சம அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அப்படியிருக்கையில் அவர்கள்

33