பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன், தற்காலத்தில் நிகழ்வதுபோல்: சமூகத்தில் சுரண்டப் பட வேண்டும்.

பனம் படைத்த கேளிக்கையாளர்களுக்கு, பெண்கள் ஆடை அவிழ்த்து ஆடுகிற நடனம் (ஸ்ட்ரிப்-டீஸ்) செலவு மிகுத்த பொழுது போக்கு ஆக விளங்குகிறது. மிகுதியாகக் குழுமியிருக்கிற ரசிகப் பெருமக்கள் முன்னிலையில் ஒரு பெண் தனது சகல ஆடைகளையும் உதிர்த்து விட்டு ஆடுவதகுல், அந்த தாட்டியத்துக்கு ஏற்பாடு செய்கிற பிசினஸ் ஆதலாளிக்குப் பெரும் பனம் வந்து சேர்கிறது; அந்தப் பெண்ணுக்கு பிழைப்புக்கு வழி ஏற்படுகிறது. :

இந்தியாவில் பண அதிபர்கள் நடத்துகிற ஒரு சில வாரப் பத்திரிகைகள் -தமிழ் நாட்டில் வெளிவருபவையும் கூட-தங்கள் பிரதிநிதிகளை மேலே நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. ஹாங்காங், டோக்கியோ, பாங்காக் போன்ற கீழ்த்திசை நகரங்களுக்கும்,டென்மார்க், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய மேற்கத்திய நாடுகளுக்கும் பத்திரிகைக் கரர்கள் போவது, அங்கெல்லாம் செழித்து வளர்கிற செக்ஸ் வியாபாரம் பற்றிய ரசமான தகவல்களை சேகரித்து வருவதற்காகத்தான். இது அனைவரும் அறிந்த விஷயமே.

அயல் நாடுகளுக்கு தங்கள் ஆட்களே அனுப்ப முடியாதி திலையில் உள்ள பத்திரிகைகள் பம்பாய்க்கும் டில்லிக்கும் விசேஷ நிருபர்களே அனுப்பி, அங்கே விபசார விடுதிகளில் அவதிப்படுகிற அபலேப் பெண்களின் சோகக் கதைகளை சேகரம் செய்கின்றன.

இவர்களின் இத்தகைய முயற்சிகளினல், விபசாரம் என்கிற படுமோசமான நோயின் நச்சுக் கிருமிகள் அடக்கி ஒடுக்கப்படுமானல், அல்லது அழித்து ஒழிக்கப்படுமென்ருல், தாம் இப்பத்திரிகைக்காரர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

ஆளுல், துரதிர்ஷ்டவசமாக, அப்படி எதுவும் நடப்ப தில்லை; நடக்கவும் முடியாது. ஏனெனில், இத்தீமையை அகற்ற வேண்டும்-இல்லாது ஒழிக்க வேண்டும்-என்ற நோக்கத்துடன் பத்திரிகைகள் இத் தகவல்களை சேக்ரிப்

40