பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமையான இவ் ஏற்பாட்டின் மூலம் நிறைய பணம் பண்ணமுடியும் என்று எண்ணினர் அந்த மூளை பிரதர்.

"உண்ஆைம், இது புதுமையான கருத்துதான், இதுவரை பெண்கள் செயல்புரிவதை ஆண்கள் கண்டு ரசிப்பதற்கு உரிய ஸ்ட்ரிப்-டிஸ் இடங்கள் தானே இருந்துள்ளன. பெண்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா? ஆண்களுக்குள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கும் உண்டுதானே?' என்று அவர் நினைத்தார்.

உடனடியாக, கூட்டாளிகளே சேர்த்துக் கொண்டு, பெண்களுக்கான விசேஷ கிளப்பை, ஆண்கள் ஆடை அவிழ்த்து ஆடும் கிளப்' தொடங்கினர். வெகு சீக்கிரத்தி லேயே அவர் உணர்ந்து விட்டார், "நாம் இந்தத் தொழிலில் ஈடுபட்டது நல்ல காரியம்தான். அதற்கு அவசியத் தேவை இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது” என்து.

எடுப்பான விளம்பர வெளிச்சத்தோடு இயங்குகிறது அந்த கிளப்.

'பெண்களோடு வருகிற ஆண்கள்

மட்டுமே அனுமதிக்கப்படுவர்.'

  • பெண்களுக்கு நல்வரவு! ஆடை

அவிழ்த்து ஆடும் 35 ஆண்கள்

அம்மணமாகவும் காட்சிதருவார்கள்' என்று ஆசை காட்டும் வாசகங்கள் கட்டிடத்தின் வெளியே காணப்படுகின்றன.

வெற்றிகரமாக இயங்குகிற இந்த கிளப்பை பின்பற்றி மற்றும் அநேக கிளப்புகள் அங்கே தோன்றியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு கிளப்பின் சூழ்நிலையையும் செயல் முறையையும் சமீப காலத்திய ஃபாஷன் பத்திரிகைகள் படங்களோடு வர்ணித்துக் கொண்டிருக்கின்றன:

44