பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. போதை மருந்துகள்

தமிழ் நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாராயக் கடைகளும், பீர்-பிராந்தி-ஒயின் ஷாப்புகளும் அதிகமாகிவிட்டன. இவை மட்டுமின்றி தூக்க மாத்திரைகள், ஒப்பியம், கஞ்சா எல்.எஸ்.டி. மாத்திரைகள் முதலியனவும் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதற்கும் வசதிகள் உள்ளன.

இந்த போதை மருந்துகளை பணக்காரர்கள் மட்டுமின்றி கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்கிற இளைஞர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் தாராளமாக உபயோகித்து வருகிருர்கள்.

தேர்வு காலங்களில் பலர் இரவு நேரங்களில் விழித்திருப் பதற்கும், கவலைகளே மறப்பதற்கும் போதை மாத்திரைகளே உட்கொள்ளுகிரு.ர்கள். அது பழக்கமாகி விடவும், அடுத்து அவர்கள் கஞ்சா, சரஸ் போன்ற போதைப் பொருள்களை உபயோகிக்கிருர்கள். கால ஓட்டத்தில் இம் மருந்துகளுக்கு அடிமையாகி விடுகிருர்கள்.

இந்தவித மருந்துகளிளுல் ஏற்படக் கூடிய பயங்கரமான பின்விளைவுகளைப் பற்றி நன்ருகத் தெரிந்துள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 35 சதவிகிதம் பேர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்று ஒர் ஆய்வு அறிவிக்கிறது.

'பன்னட்டு வணிக நிறுவனங்களின் அமைப்பும், அவைகளின் விற்பனைத் திட்டங்களும், உலகில் மக்கள் அருந்தும் போதைப் பொருள்கள் சரசமாகக் கிடைப்பதற்கும்

あむ