பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதையும், எந்தவித ஆய்வுகளுக்கும் இடம் தராதிருப் பதையும் அவர் ஆதரித்தும் வலியுறுத்தியும் வருகிரு.ர்.

--மக்களின் சுகாதாரம், உடல்நலம் இரண்டுக்கும் சமுதாய, பொருளாதாரத் தனியார் துறைப் பரிமாணங்கள் இருக்கின்றன. இன்று வேகமாக சமுதாயப் பொருளாதார மாற்றங்களை அடைந்து வருகிற வளரும் நாடுகளின் வளர்ச்சியின் பயனுக, அவைகளால் தவிர்க்க முடியாத மக்கள் சுகாதார, உடல்நல, சமுதாயப் பிரச்சினைகள் எழுகின்றன.

-மேற்கு நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்ட பொழுது அளவற்ற குடிப்பழக்கம் அவைகளைக் கொள்ளை கொண்டது. இன்று வறுமையில் ஆழ்ந்துள்ள வளரும் நாடுகளையும் அதே அளவுக்குக் குடியிலும் போதைப் பொருள்களிலும் ஆழ்ந்து விடும்படி செய்வது ஒருவகை சோக நாடகமாகும். அன்று ஐரோப்பிய நாடுகளில் உருவான குடிவெறிப் போக்கு இன்று ஆப்பிசிக்க, ஆசிய, பசிபிக் கடற்பகுதி, மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் உருவாகும் நிலைமை வளர்ந்து வருகிறது.

-தொழில் மயமான மேற்கு நாடுகளின் வர்த்தகத் திறனையும், சந்தை பிடிக்கும் ஆற்றலையும் வெறிமம் கலந்த போதைப் பொருள்களைப் பொறுத்த மட்டிலுமாவது காட்டாதிருத்தல் மிகவும் விரும்பத் தகுந்தது. அவை தமது லாபத்தை, வளரும் நாடுகளால் தாங்க முடியாத சமுதாயச் சீரழிவையும், மக்களின் உடல்நலக் குறைவையும் கொண்டு சம்பாதிக்க முனையலாகாது. இந்த வளரும் நாடுகள் தமது வாழ்வில் ஒரு முக்கியமான, ஆனல் மிகவும் பாதிக்கத்தக்க, கட்டத்தை அடைந்துள்ளன. இந்நாடுகளில் வெறிமம் கலந்த போதைப் பொருள்களைப் பரந்த அளவில் கிடைக்க வழி செய்வது அவைகளின் வளர்ச்சி வேகத்தையும், சமுதாய மாற்றங்களையும் தடை செய்யவும் திசை மாற்றவுமே உதவும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வு - அறிக்கையை நன்கு ஆராய்ந்த அறிஞர் ஒருவரின் எச்சரிக்கைக் குரல்தான் இது.

5 8