பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீர், சாராயம் போன்ற வடிகட்டிய போதைப் பொருள் களின் உற்பத்தி கடந்த இருபது வருடங்களாகவே வேகமாக அதிகரித்து வந்துள்ளது. இக்காலத்தில் உலகெங்கும் குடிக்கப் படுகிற போதைப் பொருள்களின் அளவும் பெருகி வந்திருக் கிறது. இந்த வேகம், மற்ற உலக நாடுகளைக் காட்டிலும், மூன்ரும் உலக வளரும் நாடுகளில் கூடுதலாகவே இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிருர்கன்.

பன்னட்டு வணிக நிறுவனங்களும், அவை கையாளும் உலகளாவிய விற்பனைத் திட்டங்களும் வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் போதைப் பொருள்கள் தாராளமாக சரச விலையில் கிடைப்பதற்கும், அதன் பயஞ்க நாளுக்கு நாள் கூடுதலாக அவை அருந்தப்படுவதற்கும் வகை சென் கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிருச்கள்.

1970கள் வரை மதுவகைகள் மற்றும் போதைப் பொருள்கள் அருந்தும் பழக்கம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக வளர்ந்து வலுப்பெற்றிருந்தது. 1970க்குப் பிறகு பொருளாதார மந்தம் அங்கே தலை காட்டிய சந்தர்ப்பத்தில் இச்சரக்குகளின் விற்பனை குறை வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அப்போது உலகளாவிய தேவைகளுக்காக கப்பல் கப்பலாக மதுவகை களே ஏற்றுமதி செய்து விற்பனை பண்ணி வந்த பெரும் குழுக்கள் வளர்ந்த நாடுகளை விடுத்து வளர்ந்து கொண்டி ருக்கும் நாடுகள்மீது அதிக கவனம் செலுத்தலாயின.

மிக வேகமாகப் போக்குவரத்து வசதிகளும் செய்தித் தொடர்புகளும் கிடைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இது சமகால நிகழ்வாக அமைந்தது. உலகம்தழுவிய விற்பனை ஏற்பாடுகளையும், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முடிவு களையும் செய்வதற்கு இந்த இரு வசதிகளும் நன்கு வாய்ப்பு ஏற்படுத்தின.

வெறிமம் கலந்த, குடிவகை தவிர்ந்த, வேறு வகை போதைப் பொருள்களின் உற்பத்தி காலவேகத்தோடு போட்டியிட்டு வளர்ந்து வந்திருக்கிறது. 1977-ல் 36

59