பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றச் செயல்களும் கொலை கொள்ளைகளும் மலிந்து வருவதாகக் கருதுவது தவறு என்றும் கேளிக்கை விஷயங்களைத் தயாரிப்பவர்களும் அவர்களை சேர்ந்தவர்களும் வலியுறுத்த விரும்புகிரு.ர்கள்.

எதார்த்த நிலைமைகள் முதலாளித்துவ பிரசாரகர்களின் கூற்றுக்கு நேர்மாருனவையாகவே இருக்கின்றன.

வன்முறைச் செயல்கள், கொலை கொள்ளை முதலிய குற்ற தடவடிக்கைகள், செக்ஸ் காட்சிகள், இவற்றை எல்லாம் எடுப்பாகக் காட்டுவதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங் களுக்கு கொழுத்த லாபம் கிடைக்கிறது. எனவேதான் மேலே நாடுகளில் தொலைக் காட்சிக் கம்பெனிகள் அவர்களது சொந்தத் தயாரிப்புகளிலும், மற்றும் திரைப்படங்கள் நாடகங்களிலும் இந்த ரகமான காட்சிகளே அதிகம் அதிக மாகச் சேர்த்து வருகிரு.ர்கள்.

பயங்கரமான சண்டைக் காட்சிகள், தாக்குதல் மற்றும் சித்திரவதைகள், ரத்தம் கொட்டும் பயங்கரக் காட்சிகள், போன்சார் தடத்தும் சித்திரவதைகள், வேறு பலவிதமான கொடுமைகள் கலந்த தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஆர்வம் அகிகம் உடையவர்களாக அவர்கள் இருக்கிரு.ர்கள்.

“இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் வன்முறைக் காட்சிகளைக் கண்டு கண்டு அவற்றுக்குப் பழக்கப்பட்டுப் போகிருர்கள். ஆகவே, பார்ப்பவர்களின் ஆர்வத்தைக் கிளறி அவர்களைக் கவர்வதற்காகவும், அந்த ஆர்வத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வைப்பதற்காகவும், தயாரிப்பாளர்கள் மேலும் மேலும் கொடிய வன்முறைக் காட்சிகளை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இன்றைய வன்முறை நாளேக்கு அலுத்துவிடும். அதனல் புதிய புதிய வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றவாறு இருக்கின்றன” என்று கலை நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்த ஆய்வுக்குழு ஒன்று அறிவித்துள்ளது.

76