பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழா மேடையில், கலை அரங்கத்தில் , பார்வையாளர் தன் அமர்ந்திருந்த இடத்திலெல்லாசி திடீர் இருள் பரவி பதும், மகளிர் மத்தியில் குழப்பமும் கலவரமும் கவிந்தது. தக்க தருணத்திற்காகக் காத்திருந்தவர்கள்போல், விரும்பத் தகாத போக்குடைய மாணவர்கள் அங்கே புகுந்து விளையாடினர்கள். அரைமணி நேரம் நீடித்த இருட்டு, இருள் மனத்தவர்களின் தியசெயல்களுக்குத் துணைபுரிந்தது.

இது பரபரப்பு ஏற்படுத்தும் செய்தியாக அடிபட்டது பத்திரிகைகளில், சிறிது காலத்துக்கு.

இப்படிப்பட்ட பரபரப்புச் செய்திகளை பத்திரிகைகள் நான்தோறும் உற்சாகத்துடன் தந்து கொண்டிருக்கின்றன.

தனியாகச் சென்ற பெண்ணைக் கடத்திச் சென்று பல 8. கற்பழித்த விவரம்: பக்கத்து விட்டிஅள் வாலிபன் புகுந்து கன்னிப் பெண்ணை கற்பழித்தது; காதல் காரண மாகப் படுகொலே: பட்டப்பகலில் பாங்கிலே கொள்ளை படித்த கும்பல்; இரவில் தனி வீட்டில் கொள்ளையர்கள் திரவேசம்; கணவன் மனைவியை கொன்றுவிட்டு நகை கனயும் பணத்தையும் திருடிச் சென்றது; பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டது; வறுமை காரணமாய் குடும்பம் முழுவதும் தற்கொலையில் ஈடுபட்டது: வரதட்சணைக்காக மாமியார் மருமகளை மண் ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தது; கணவனும் அதற்குத் துணை செய்தது......

இவை போன்ற செய்திகள் தினத்தாள்களில் விறுவிறுப் பாகவும் எடுப்பாகவும் அச்சிட்டுப் பரப்பப்படுகின்றன. சமூகத்தின் ஒரு சில தனிநபர்களின் வக்கிரப் போக்குகளே சமூகத்துக்கு மிக முக்கியமான செய்திகளாகும் என வாசகர்களை நம்பவைக்கும் விதத்தில் இவை அச்சிடப்படு கின்றன.

அவற்றைப் பார்க்கையில் இந்த நாட்டில் வன்முறையும் இரக்கமற்ற கொடுரச் செயல்களும் நாள்தோறும் பெருகி வருவதாகவே தோன்றும். .