பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலதனத்தின் லாபகரமான வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்கிற முதலாளித்துவமும், முதலாளித்துவ சக்திகளின் பொருளாதாரத் துணையை நாடுகிற அரசாங் கங்களும் விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங்களே தங்களது லாபங்களே அதிகரிப்பதற்காகவே பயன்படுத்துகின்றன. டி.வி. காஸ்ட் வீடியோ சாதனங்கள், செய்திப் போக்கு வரத்துத் துறைத் துணைக் கோள்கள், மற்றும் மின்னணு: விண்ணியல் தகவல் தொடர்பு, மின் இரசாயனம்” அத்துடன் இணைந்த தொழில் துறை ஆகிய அனைத்தும் முதலாளிகளுக்குக் கொள்ளை லாபம் சேர்ப்பதற்காக ஏற்பட்டவையாகத்தான்.இன்றைய உலகில் விளங்குகின்றன.

லாபம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல் புரிகிற பணநாயகர்கள் மக்களுக்கு அளிக்கப் படுகிற தகவல் களின் தன்மைகள், அவற்றின் விருப்பு வெறுப்பற்ற தன்மை, தார்மிக அம்சம் போன்றவை குறித்து எண்ணிப் பார்ப்பது மில்லை. அவை மக்களை பாதிக்கிற விதங்கள் பற்றியும் சிந்திப்பது கிடையாது.

இத் தகவல் சாதனங்கள் பெரும் லாபம் பெற்றுத் தர உதவுகின்றன என்பதோடு அவை பெரும் சித்தாந்த ஆயுதம் ஆகவும் பயன்படக் கூடியவை மக்களை சித்தாந்த ரீதியில் அடிமைப் படுத்தக் கூடிய வலிய கருவிகளும் ஆகும் என்பு தையும் முதலாளித்துவ சக்திகள் நன்கு அறிந்து வைத்திருக் கின்றன. அதனலேயே, வெகுஜனத் தகவல் சாதனங்களும் பிரசாரக் கருவிகளும் கூடிய வரையில் தங்கள் ஆதிக்கத்தி லேயே இருக்க வேண்டும் என்று மேலேய ஆளும் வர்க்கத் தினர் ஆசைப் படுகிரு.ர்கள்.

எனவே, மூதலாளித்துவத்தின் கீழ் தகவல் துறை வளர்ச்சி அடைந்து வருவதற்கு லாப நோக்கு, சமூகத்தை அரசியல் ரீதியாகத் தங்கள் கட்டுப்பாட்டினுள் வைத் திருப்பது ஆகிய இரண்டும் அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

姆密