பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேஷன் ஏஜன்சி) தனது பிரசார வேலைகளே செய்து வரு கிறது. யுஎஸ்ஐஏ என்ற அமைப்பு தவிர, மேலும் 20 ‘பெடரல் ஏஜன்சி'களும் நிறுவனங்களும் அமெரிக்காவுக்காக அயல் நாடுகளில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக் கின்றன. மத்திய உளவுத்துறை ஸ்தாபனம் (சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜன்சி) தான் இவை அனைத்தினும் தலையாயது ஆகும். இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இதர வெளிநாடுகளிலும் பரவிக் கிடக்கிற வெகுஜனத் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறது.

அமெரிக்க அமைதிப் படை (யுஎஸ் பீஸ் கோர்) என்று பிரசித்தி பெற்ற அமைப்பின் மூலமும் பிரசார வேலைகள் நடைபெறுகின்றன. இதன் பிரிவுகள் அறுபதுக்கும் அதிக மான நாடுகளில் செயலாற்றுகின்றன.

இதே ரகமான பிரசார அமைப்புகளை பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, மற்றுமுள்ள ஏகாதிபத்திய நாடுகளும் நடத்துகின்றன. அமெரிக்க ஸ்தாபனங்களின் அளவுக்கு அவை பெரியனவாக இல்லை என்ருலும் முதலாளித்துவத் திற்கான பிரசாரங்களை அவையும் ஓயாது செய்து வரு கின்றன.

இவ்விதமாக அமெரிக்காவுக்கு வெளியே இயங்குகிற அதிக அளவிலான பிரசர நிலையங்களும், ரேடியோ டெலிவிஷன் நிலையங்களும், அவற்றின் பிரசார சாதனங் களும், மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, இராணுவ உணர்வை ஊட்டுவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

உலக அரங்கில், ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கம் இவ்வாறு சித்தாந்தப் பிரசாரத்துக்காக ஏன் ஏகப்பட்ட பணம் செலவு பண்ண வேண்டும்?

ஏகாதிபத்தியவாதிகள் கையாள்கிற யுத்த தந்திரப் படியான முக்கிய நோக்கங்களில் இந்தக் கேள்விக்கான விடை காணக்கிடக்கிறது.

岛台