பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 101 கூட, சொல்வது புரியவில்லை என்றால், விரலாலே மண லிலோ- எழுது கோலாலே தாளிலோ வரைந்து காட்டு வதைக் காணலாம். இவ்வாறு பல கலைகளின் ஊடும் நீக்கமற நிற்கும் ஒவியம், உலகப் பொதுமொழி என்று சொல்லப்படும் தகுதி யும் உடையதாகும். யானை என்று தமிழில் சொன்னாலும் எழுதினாலும் தமிழ் அறியாதவர்க்குப் புரியாது. வாரணம் என்று சமசுகிருதத்தில் சொன்னாலும் எழுதினாலும் அம் மொழி அறியாதவர்க்குப் புரியவே புரியாது. மற்றும், Elephaht என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் எழுதினா லும் ஆங்கிலம் அறியாதார்க்குப் புரியாதுதானே. ஆனால் யானையின் படம் போட்டுக் காட்டினால் எல்லா மொழி யினரும் புரிந்து கொள்வர். இதனால், ஒவியத்தை ஒர் உலகப் பொது மொழி என்று கூறலாம் அல்லவா? சில பொருள்களைப் பார்த்தறியாதவர்க்கு, எவ்வளவு தான்-எத்தனை சொற்களால்தான் சொல்லியும் எழுதியும் விளக்கினாலும் முற்றிலும் தெளிவாகப் புரியாது; யானை கண்ட குருடர்களின் கதை போன்றுதான் இருக்கும். ஆனால், ஆயிரம் சொற்களால் விளக்க முடியாத ஒரு பொருளை ஓவியமாக எழுதிக் காட்டினால் எவரும் எளி தில் புரிந்து கொள்வர். ஒரு படம் ஆயிரம் சொற்களின் பெறுமானம் உடையது என்னும் கருத்துடைய One picture is worthy of thousand words’ ateirgilih -2,515,605 Qgimol-ff இங்கே ஒப்புநோக்கத் தக்கது. அடுத்து, ஒவியம்’ என்பதன் பெயர்க் காரணத்தைப் பார்ப்போமா? பிற மொழிகளில் உள்ள பல்வேறு பெயர் களைவிட, தமிழ் மொழியில் உள்ள ஓவியம்’ என்னும் பெயர் மிகவும் பொருத்தமானது. ஒவியம் என்பது, ஒரு