பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 113 களோடு பொழுது போக்கிவிட்டு மாலையில்தான் கடைக்கு வருவார். மாலையிலும் கடைக்கு வராத நாட்கள் பலவாகும். அங்ங்ணமிருந்தும், கடிகார வாணிகத்தின் வாயிலாகப் பெரும் பொருள் சேர்ந்தது; மாபெருஞ் செல்வரானார். கலைமகள் அருளும் அலைமகள் அருளும் ஒருங்கே வாய்க்கப் பெற்றார். தமிழ் படைப்பு : பெரும் புலவருமான இவர், இராசமாணிக்கம்’ என்னும் இயற்பெயரின் பொருள் கொண்ட அரசமணி" என்பதைப் புனைபெயராகக் கொண்டு இதழ்களில் உரைந்டைக் கட்டுரைகள் சில எழுதியிருப்பினும், செய்யுள் நடையினையே பெரிதும் விரும்பினார். செய்யுள் நூல்கள் பல இயற்றி வெளியிட்டார். மயிலம் முருகன் மேல் இவர் இயற்றி வெளியிட்டுள்ள பாமாலை நூல்கள் பல. அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது 'அன்பு விடு தூது’ என்னும் நூலாகும். சிற்றிலக்கியங்கள் பல இவரிடமிருந்து முகிழ்த்தன. இவ்வாறு படைப்பிலக்கிய ஆசிரியராகவும் திகழ்ந்தார். . பொழுதுபோக்கு : . o இராசமாணிக்கனாரின் பொழுதுபோக்கு தமிழ் நூல் களோடும் தமிழ்ப் புலவர்களோடும் நன்கு நடைபெற்றது. திருவள்ளுவனாரின் ' நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு'- . என்னும் குறட்பாவும், ஃஎன்ரிவுட்டன் (Henry Wotten) stairgoth oftālavlo Ljavouri, “Character of The Happy Life' என்னும் தலைப்பையுடைய கம் பாடலின் இடையே கூறியுள்ள