பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மக்கள்குழு ஒப்ப்ந்தம் வீட்டிற்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்' என்று சொல்லி அனுப்பி விட்டார். . ரெட்டியார் உட்படத் தம் வீட்டிற்கு வந்த புலவர்கள் பலர் ஊர் திரும்பும்போது, புகைவண்டிக் கட்டணச் சீட்டு அவர்கட்குத் தெரியாமலேயே முன்கூட்டி எடுக்கப்பட்டு அவர்களிடம் தரப்படும். சிலருக்குக் கட்டணச் சீட்டுடன் காசும் புகைவண்டி நிலையத்தில் தரப்பட்ட துண்டு. ரெட்டியாரைப் போலவே இளவழகனார் முதலியோரும் இவரால் போற்றப்பட்டு விருந்தோம்பப் பெற்றவராவர். யான் (சு.க) எழுதிய "தமிழ் நூல் தொகுப்புக் கலை” என்னும் நூலை இராச மாணிக்கனார் திரும்பத் திரும்பத் தொடர்ந்து மும்முறை படித்தாராம். அந்நூலால் கவரப் பெற்ற இவர், 1973-ஆம் ஆண்டு, புதுவை ஆளுநர் தலைமையில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். ‘புதுப் படைப்புக் கலைஞர்” என்ற பட்டமும் சான்றிதழும் வாழ்த்துப் பாவும் பொற்கிழியுடன் அவ்விழாவில் எனக்கு அளித்தார். இவ்வாறு இன்னும் பல வடிவங்களில் இப் பெரியாரது அருட்கொடை நிகழ்ந்தது. ஆசிரியர்: இராச மாணிக்கனார் பலர்க்கு ஆசிரியராக இருந்து இலக்கிய இலக்கண நூல்களைப் பயிற்றியதும் உண்டு. தம் வீட்டிற்கு வந்து தம்மிடம் கல்வி பயின்றவர்கட்குக் கல்வியுடன் காஃபி-சிற்றுண்டிகளும் வழங்கியதுண்டு. இவர் இயற்கை எய்திய பிறகு நடைபெற்ற நினைவு விழா ஒன்றில், முன்னர் இவரிடம் இலக்கணம் பயின்ற ஒருவர் பின்வருமாறு ஒரு கருத்தைக் கூறினார்: "நன்னூல் கற்றுத்தரும்படி யான் ஐயா அவர்களைக் கேட்டுக்கொண் ட்ேன். அதற்கு அவர், ஒ, அதற்கென்ன! நாம் இருவரும் இப்போது சேர்ந்து கற்கலாமே என்று கூறினார்கள்' -