பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மக்கள்குழு ஒப்பந்தம் கொள்ளலாம். இஃது ஒர் இசைத் தமிழ் நூல் என்பதற்கு, வியாழம் என்னும் சொல்லும் அகவல் என்னும் சொல்லுமே போதிய சான்றுகளாகும். விளக்கம் வருமாறு: முதலில் அகவல் என்னும் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இறையனார் அகப்பொருள் உரையின் ஒலைச் சுவடிப் படிகள் (பிரதிகள்) சிலவற்றில் வியாழ மாலை அகவல் என நீளமாகக் குறிப்பிடப்பட் டிருக்கும் இந்நூல். அதே உரையின் வேறோர் ஒலைச் சுவடியில் ‘அகவல்’ எனச் சுருங்கக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி என்னும் நூல் சிந்தாமணி எனவும், புறப் பொருள் வெண்பா மாலை என்னும் நூல் வெண்பா மாலை எனவும் இறுதிப் பகுதியால் பெயர் வழங்கப் படுவது போல, வியாழ மாலை அகவல் என்னும் இந் நூலும் அகவல் என இறுதிப் பகுதியால் வழங்கப்பட்டது போலும்! முதலியார்க்குள்ளும் செட்டியார்க்குள்ளும் சிறப்புப் புகழ் பெற்றவர்களை முழுப் பெயர்களால் சுட்டாமல், முதலியார் எனவும் செட்டியார் எனவும் இனப் பெயர்களால் குறிப்பிடுவதுபோல, அகவல் நூல்கள் பல இருக்கவும், சிறப்பு கருதி இந்நூல் அகவல் எனப் பாப் பெயரால் சுட்டப்பட்டது போலும்! பாவால் பெயர் பெற்ற பரிபாடல், கலி என்னும் தொகை நூல்களைப் போலவே, இந்நூலும் அகவல் பாக்களின் தொகுப்பு நூல் என்பது புலனாகலாம்." அகவல் என்பது வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களுள் ஆசிரியப் பாவைக் குறிக் கும். தொல்காப்பியம் - செய்யுளியலில், இந்நால்வகைப் பாக்களைப் பற்றிய சிறு விவரம். ஓரிடத்தில் தரப்பட் டுள்ளது. நான்கின் விவரம் முறையே வருமாறு : ‘அகவல் என்பது ஆசிரி யம்மே” (77)