பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மக்கள்குழு ஒப்பந்தம் "இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயி னும் அமையும்' -"இவற்றுக்கு உதாரணம் காணாமை, யின் காட்டாமாயினாம்; இலக்கணம் உண்மையின் அமையும் என்பது - இலக்கணம் உண்மையின் இலக் கியம் பெற்றவழிக் கண்டு கொள்க' இதனால், பல்லாயிம் ஆண்டுகட்கு முன்பே, தமிழில், இசை இலக்கிய-இலக்கண நூல்கள் பல இருந்தமை புலனாகும். தமிழ் இசையின் தொன்மை: தமிழ் இசையின் தொன்மை பற்றிப் பலராலும் பேசப் படுகிறது. இதற்கு ஆராய்ச்சி தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு குழு மக்களால் தமிழ் என்னும் மொழி பேசப்படத் தொடங்கிய போதே தமிழ் இசையும் தோன்றிவிட்டது, தமிழ் எழுத்துகள் உருவாக்கப்பட்டு நூல்கள் இயற்றப் படத் தொடங்கியதற்கு முன்பே தமிழிசை தோன்றி விட்டது. இசைக்குக் கல்வி இன்றியமையாததாக அன்று இல்லை. இன்றும் கல்வி கற்காத பலர் இசைப் பாடல்கள் பாடுவதைக் கேட்கலாம். அவற்றுள் சில: தாலாட்டுப் பாடல், நிலாப் பாடல், விளையாட்டுப் பாடல், கும்மிப் பாடல், கோலாட்டப் பாடல், வழிநடைப் பாடல், ஏற்றப் பாட்டு, உழவுப் பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, பல்வேறு தொழில்கள் செய்யும்போது பாடும் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல், நாடோடிப் பாடல் - இன்ன பிறவாம். • , - இவை மரபு வழி மரபு வழியாக-அன்று தொட்டு இன்றுவரை, வாய்-செவி மூலமாகக் கற்கப்பட்டுப் பாடப் பட்டு வருகின்றன.