பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குழு ஒப்பந்தம் 157 கறிகாய் தேடாமல் சமைத்து உணவு அளிக்கலாம். இதனால் தான், மேற்கூறிய முது மொழி எழுந்தது. எனவே, ஊருணி போல, ஊரார்க்குப் பயன்படுகிற முதல் (Capital) பொருளாயும் முதன்மையான பொருளா யும் இருப்பதால் முருங்கைக்கு 'ஊருடை முதலியார்’ என்னும் பெயர் அளிக்கப் பெற்றது போலும்! இங்கே இன்னொரு கருத்தும் நினைவுகூரத்தக்கது. 2) சிற்றுார்களில் முருங்கை மரம் இல்லாத வீட்டார், வேறொருவர் வீட்டில் இருக்கும் மரத்தைச் சொந்தமாகப் பயன்படுத்திக் கொள்வதும் உ ண் டு. இதனாலும், முருங்கைக்கு, 'ஊருடை முதலியார்” என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்கலாமோ? மற்றொரு கருத்தையும் இங்கே சொல்லாமல் விடுவதற்கில்லை. என் சொந்தச் சிற்றுாரில் எங்கள் வீடு உட்படப் பெரும்பாலான வீடுகளிலும், (வீட்டுத்) தோட்டத்தில் முருங்கை மரம் இருப்பதில்லை; தெருவிலேயே வைத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. இதற்கு உரிய காரணமாகப் பலர் ஏதேதோ சொல்வ துண்டு. ஆனால் யான் ஒரு காரணம் கூறுவேன்: 3) பொதுவாக மரங்கள், மாந்தர் வெளிவிடும் தீய காற்றாகிய கரியகக் காற்றைத் (carbondioxide) தாம் உள் ளிழுத்து வளர்கின்றன என்பதைப் பலரும் அறிவர். இந்தக் கரியகக் காற்று முருங்கை மரத்துக்கு மிகவும் தேவை. வீட்டுத் தோட்டத்தில் உள்ள முருங்கையினும், தெருவில் உள்ள முருங்கையே, நடமாடும் மக்கள் பலர் விடும் கரியகக் காற்றை மிகவும் பெறுகிறது; அதனால் நன்கு வளர்கிறது. தோட்டத்தில் வைத்துப் பார்த்து உருப்படாமற் போனதை அறிந்த மாந்தர் தெருவில் வைத்து வளர்க்கலாயினர். (இந்தக் கருத்தை என் மருமகள் சொல்ல அறிந்துகொண் டேன் யான்.)