பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கவிக் குரல் 1 1960-ஆம் ஆண்டு பொங்கல் நாள் அன்று, புதுவை சக்தி நிலையத்தின் சார்பில் உலகு உய்ய' என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்கியபோது, கவியரங்கின் முடிவில் தலைமையுரையாக நான் வழங்கிய பாடல் பகுதியை இவண் தருகிறேன். நீண்ட தொடர் கருத்தாக இருப்பதால் ஆசிரியப் பாவாகப் படைத்துள்ளேன். இதோ பாடல்: 4 & உலகு உய்ய э 2 ' உலகம் நலமாய் உய்ய வேண்டுமால்! உலகம் உய்ய என்செய வேண்டுமோ? உலகம் உய்க எனும்வாய் வாழ்த்தால் உலகம் நன்றாய் உய்ந்து விடுமோ? இந்நாள் வரையஃ துய்ய வில்லையோ? பன்னெடு நாளாய்ப் பாரகம் உளதே ! இப்பா ரதனில் எப்பொருள் இல்லை? அலைகடல் இல்லையோ ஆறுகள் இல்லையோ மலைகள் இல்லையோ மரஞ்செடி இல்லையோ மண்வளம் இல்லையோ மக்கள் இல்லையோ உண்பொருள் இல்லையோ உறையுள் இல்லையோ போற்று நூல் இல்லையோ புலமை இல்லையோ ஆற்றல் இல்லையோ ஆராய்ச்சி இல்லையோ மல்லல் உலகத்து இல்லாத தென்ன?