பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மக்கள்குழு ஒப்பந்தம் நிலைக்கு இனி இடம் இல்லை; ஒருவர் பல வகையில் வருந்தும்போது இன்னொருவர் அவருக்கு வேண்டியவற் றைச் செய்யாம்ல் வாளா பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கத்திற்கு இனி இடம் இல்லை; எனவே, இனி ஒரு விதி (சட்டம்) உண்டாக்குவோம்; அந்த விதியை எப்போ தும் போற்றிக் காப்போம்; அதாவது: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகுக்க வேண்டும். தனி ஒரு மனித னுக்கு உணவு கிடைக்கவில்லை யெனினும் உலகக் கூட்டுறவால் என்ன பயன்? - இந்த உலகத்தையே அழித்து விடவேண்டும்-என்று கொதித்துக் கூறியுள்ளார் பாரதியார். இவரது பாடல் பகுதியைப் பார்ப்போமே! " மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்; தனி யொருவனுக்கு உணவு இலையெனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்பது பாரதியாரின் அணுகுண்டுப் பாடல் பகுதி. இது காறுங் கூறியவற்றால் உலக மக்கள் அனைவரும் வளத் தோடும் நலத்தோடும் வாழ அனைவரும் ஆவனபுரிய வேண்டும்; இதுதான் மக்கள் குழு ஒப்பந்தம் - சமுதாய ஒப்பந்தம் ஆகும் - என்பது தெளிவு. ‘' எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” - தாயுமானவர் பாடல் " தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்’ - - திருக்குறள்