பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆறும் ஊரும் “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது ஒளவை மொழி. உலகில் உள்ள ஊர்கள் எல்லாம் ஆற்றங்கரை யிலேதான் உள்ளனவா? அல்ல. மற்ற ஊர்களினும் ஆற்றங் கரை ஊர்கள் பல்வகை வாய்ப்புகள் மிகப்பெற்றவை என்பது கருத்து. மருதம் : உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவற்றுள் நீரும் உணவும் முதன்மையானவை. நீர் இன்றி உணவுப்பொருள் இல்லை. எனவே, நீர் தாழ்ந்த நிலப்பகுதியிலே பண்டை மக்கள் நிலையாக உறைவிடம் அமைத்துத் தங்கலானார் கள். வானம் பார்த்த மண் பூமியினும் குளங்குட்டைகள் நிறைந்த பகுதி மேலானது. அதனினும், ஊற்றுக் கேணி களும் ஏரிகளும் மிக்க பகுதிகள் முறையே மேலானவை. அவற்றினும், ஆற்றங்கரைப் பகுதிகள் மிகவும் மேலானவை. ஆற்றங்கரைப் பகுதிகளிலேயே, நெல் போன்ற உயர் பொருள்கள் விளையும் நன்செய் வயல்கள் உருவாகிப் பரந்து கிடக்கும். இந்த வயல் சார்ந்த பகுதிக்கே மருத நிலம்’ என்பது பெயர். காடு சார்ந்த முல்லைநிலக் கொல்லைகளைவிட, மலை சார்ந்த குறிஞ்சிநிலப் புனங்களைவிட, கடல் சார்ந்த நெய்தல்நிலக் கானலைவிட, ஆற்றங்கரை சார்ந்த மருத நில நன்செய் வயல்களே மிக்க விலை மதிப்புடையவை. இதன் காரணம் அனைவருக்கும் விளங்கும்.