பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மக்கள்குழு ஒப்பந்தம் குறிக்கும் மேலுள்ள பெயர்களுள் உறையுள், வசதி, வாழ்க்கை என்னும் பெயர்கள் ஈண்டு விதந்து குறிப்பிடத் தக்கன. இம்மூன்று பெயர்களும் மருதநிலத்து ஊர்களே உறைவதற்கு ஏற்றவை வசதியானவை . தங்கி வாழ்தற்கு உரியவை என்னும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன வன்றோ? ஆற்றங்கரை ஊர்கள்: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு? ஆற்றங்கரை ஊர் களின் வாழ்க்கை வசதிச் சிறப்பை, இலக்கிய இலக்கணங் களிலிருந்து சான்று காட்டித்தானா மெய்ப்பித்தாக வேண்டும்? இந்தக் காலத்து மக்கள் நேரிலே வாழ்ந்து பார்த்தே தெரிந்து கொண்டிருக்கிறார்களே! இந்தக் காலத்தில் என்றென்ன - அந்தக் காலத்திலும்எந்தக் காலத்திலும், வசதியான ஆற்றங்கரை வாழ்க்கையி லிருந்தே, கலை - கல்வி - நாகரிக வளர்ச்சிகள் தோன்றின. தோன்றும் என்னும் கொள்கைக்கு அடிப்படையிடவே இத்தனை சான்றுகள் பயன்படுத்தப்பட்டன. எகிப்திய நைல் ஆற்றங்கரையிலும், மெசபட்டோமியா வின் (இராக்) யூப்ரடீசு, டைக்ரீசு என்னும் ஈராற்றங்கரை களிலும் (மெசபட்டோமியா என்பதற்கு, இரண்டு ஆறு களுக்கு இடைப்பட்ட இடம் என்பது பொருள்), இந்தியத் துணைக் கண்டத்தின் சிந்து ஆற்றங்கரை வெளியிலும் மாபெரும் வரலாற்றுப் புகழ் படைத்த நாகரிகங்கள் தோன்றியிருந்தமை உலகறிந்த உண்யையன்றோ? உலகின் பெருநகரங்கள் பல ஆற்றங்கரைகளில் அமைந்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.