பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மக்கள்குழு ஒப்பந்தம் t நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற்கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்”. என்பன பெரியபுராணப் பாடல்கள். இது வெற்றுப் புராணச் செய்தி மட்டுமன்று; திருநாவலுர் மக்களும் வாழையடி வாழையாகச் செவிவழியறிந்து வைத்து இச் செய்தியைத் தெரிவிக்கின்றனர். சுந்தரரும் த ம து தேவாரத்தில், "நாதனுக்கு ஊர் நமக்கு ஊர்நரசிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயும்.ஊர் அணிநாவலுார்” என்று நாவலுார்க்கும் நரசிங்க முனையரையர்க்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். மற்றும், முனையரையர் மரபினர் நரசிங்கன்", 'இராமன் என்னும் இரு பட்டப்பெயர்களையும் மாறி, மாறி வைத்துக்கொண்டு நரசிங்க முனையரையர்', 'இராம முன்ையரையர்' என மாறி மாறி அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நரசிங்கன், இராமன் என்னும் பெயர்களை, திருநாவலுார் வட்டாரத்து மக்கள் மிகுதி யாய் வைத்துக்கொள்வதாகத் தெரிகிறது. இதனாலும் முனையரையர் மரபினர்க்கும் நாவலுார் வட்ட்ாரத்திற்கும் இருந்த நெருங்கிய உறவு அறியப்படும். இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலுார் வட்டாரமே, நரசிங்கமுனையரையரின் தலைநகராய் இருந் f பெரியபுராணம்-தடுத்தாட்கொண்ட புராணம்-5.