பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 4. பழக்கம் ஏற்பட்டுவிட்டது. காட்டு யானையைக் காட்டான் வியப்புடன் பார்க்கிறான் என்றால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்பது புலனாகிறதன்றோ?

  • பிக்னிக்":

பட்டிக் காட்டான் யானை கண்டாற்போல என்னும் பழமொழிக்கு ஏட்டிக்குப் போட்டிபோல், இக்காலத்தில் நகர்ப் புறத்தினர், நாட்டுப் புறங்களை வியப்புடன் நோக்கி மகிழ்கின்றனர். பேரிரைச்சலுடனும் புழுதி-புகையுடனும் எள்விழ இடம் இல்லாமல் பாதைகளில் பல்வேறு வண்டிகள் ஊர்ந்து செல்லும் நகரங்களில் வாழ்ந்து அலுப்பு தட்டிய வர்கள், ஒரிரு நாளைக்கு நாட்டுப் புறத்தில் வந்து தங்கி மகிழ்ந்து சமைத்து உண்டு பொழுது போக்குவதற்குப் 'பிக்னிக் (Picnic) என்னும் பெருமையான பெயர் தந்துள் ளனர். நாட்டுப் புறத்தின் அமைதியான இயற்கையான சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களைக் கவர்ந்து விடுகிறது. காட்சிகள்: சில சிற்றுார்களில் ஒரு பகுதியில் உயரமான மரங்களும் உயரமான கோபுரம் கொண்ட கோயிலும் பக்கத்தில் குளமும் இருப்பது அழகுக்கு வளம் ஊட்டுகிறது; வேறொரு பகுதியில் நீர் தாழ்ந்த தாமரைத் தடாகமும் கரையில் நிழல் தாழ்ந்த மரங்களும் ஊர்ப் பொதுக் குழு மண்டபமும் இருப்பது மேலும் அழகுக்கு அழகு செய்கிறது. கிராமத்தில் உள்ள சிறிய பள்ளிக் கூடப் பிள்ளைகளின் இரைச்சலும் ஏற்றப் பாட்டும் உழவுப் பாடலும் கைத்தொழில்களின் ஒலியும் இன்ன பிறவும் அமைதிக்கு ஊறு செய்வதாய்த் தோன்றாமல், அமைதிக்கு மெருகு ஊட்டுவதாக - நயஞ் சேர்ப்பதாக உள்ளன. கிராமப் புறத்தை அணி செய்வதில் ஆடு மாடுகளின் மந்தைகட்கும் உரிய இடம் உண்டு.