பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மக்கள்குழு ஒப்பந்தம் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால், பாடலி புத்திரமும் பாதிரிப் புலியூரும் ஒன்றா என்றால் இல்லை யில்லை; பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் பாடலிபுத்திரம் ஒரு தனிப் பகுதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இவ்விரண்டையும் தனித்தனி நகராகச் சேக்கிழார் குறிப் பிட்டிருப்பதை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குக் கிறித் துவ மதத்தைப் பரப்ப வந்தவர்கள், புகழ்பெற்ற இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிறித்துவக் கோயில் (சர்ச்) எழுப்ப முயன்றதும், அம்முயற்சியில் சில இடங்களில் வெற்றி பெற்றதும் சில இடங்களில் தோல்வி யடைந்ததும் நாடறிந்த உண்மை. எடுத்துக்காட்டாக, - தென்னார்க்காடு மாவட்டத்தில் மயிலம் மலைமேல் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. கோயில் உள்ள குன்றுக்குப் பக்கத்தில் இணைப்பாக மற்றொரு குன்று உள்ளது; அந்த வெற்றுக் குன்றில் மாதாகோயில் (சர்ச்) ஒன்று கட்டுவதற்காக ஐரோப்பியர் ஆட்சியில் கிறித்துவ மதத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றனராம்; முடிய வில்லை. மதம் பரப்ப முயல்வோருக்கு இது வழக்கம் என்பதை அறிவிப்பதற்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது. இதுபோலவே, பண்டு சமண சமயத்தைப் பரப்ப முயன்ற சமணர்கள், சைவசமயத்திற்குச் சிறப்பிடமாய்த் (முக்கிய கேந்திரமாய்த்) திகழ்ந்த திருப்பாதிரிப்புலியூருக்குப் பக்கத்தில் சமண சமயத்திற்குச் சிறப்பிடம் அமைக்க முனைந்தனர்; அதன் பயனாய் உருவானதே பாடலி புத்திரம். அங்ங்னமெனில், திருப்பாதிரிப்புலியூருக்கு நேர் வடக்கே 5 கி. மீ. தொலைவிலுள்ளதும் பண்டு பெரிய வடமொழிப் பல்கலைக்கழகம் திகழ்ந்ததுமான பாகூர்