பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புகழ்ப் பத்து புகழ் பத்துப் பாக்களில் விளக்கப்பட்டிருப்பது திருக் குறளில்தான். திருவள்ளுவரால் புகழ்' என்னும் தலைப்பில் பத்துக் குறட்பாக்களில் புகழப்பட்டுள்ள அப்புகழின் புகழை இப்போது இங்கே ஒருமுறை புகழ்வோமே! பொதுவாகப் புகழை விரும்பாதவர் உலகில் பெரும்பா லும் இருக்கமுடியாது. புகழைப்போல் தெவிட்டாத பொருள் வேறில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். அம்மம்மா! சிறு குழந்தைகளுக்கு மட்டும் புகழ் தெவிட்டு கின்றதா என்ன! தன் தம்பி தமையனைவிட, தங்கை தமக்கையைவிட, எதையும் தானே நன்றாகச் செய்ததாக இருக்கவேண்டும்-எதையும் தானே முதலில் பெற்றதாக இருக்க வேண்டும்-எல்லோரும் தன்னைப் பாராட்டி மதிக்க வேண்டும் என்பன போன்ற புகழ் நோக்கில் குழந்தை களுக்கு எத்துணைக் கொள்ளை விருப்பம்! இத்தகு புகழ் வேட்டை, வயதாக வயதாக, தெருவில் விளையாடும் போதாகட்டும் - பள்ளிக்கூட வாழ்க்கையிலாகட்டும் - உலக அரங்கிலா கட்டும்-நீடித்துப் பல்வகை உருவங்கொள்கிறது. உலகில் ஒருசிலர் தங்களை யாராவது புகழமாட்டார் களா என்று ஏங்கிப் பாடுகிடக்கின்றனர்; புகழ்பவரைத் தேடி அலைகின்றனர்: பு க ழ் மா ைல சூட்டுபவருக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகின்றனர். எப்படியும் தங்களை யாரும் புகழவில்லை யென்றால், தாங்களாகவே தங்களை மணிக்கணக்கில் புகழ்ந்து கொள்கின்றனர்; அப் புகழைப் பொறுமையுடன் கேட்பதற்கு ஆட்களைத் தேடி