பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மக்கள்குழு ஒப்பந்தம் " கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்”. என்பன போன்ற குறள்களைக் காட்டி, வள்ளுவர் காட்டிய அரசியல் மக்களாட்சியின் அடிப்படையில் அமைந்ததுதான் என்று சிலர் நிறுவலாம். ஆனால், மக்களாட்சிக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தக் குறள்கள், அந்தக் காலத்து மன்னர் ஆட்சியின் மாட்சியை விளக்குவதற்காக, அதாவது, இதுதான் சிறந்த மன்னராட்சி என்று தெளிவுறுத்துவதற் காக வள்ளுவரால் கூறப்பட்டவை என்ற இமாலய உண்மையை மறந்துவிடக் கூடாது. இப்போது சிறுவரும் கூறுவரே, வள்ளுவர் காட்டிய அரசியல் எந்த ஆட்சியின் அடிப்படையில் அமைந்தது என்று! வள்ளுவர் காட்டிய மன்னராட்சி யரசியற்கோட்பாடுகள் முழுவதும், மக்க ளாட்சி யரசியற் கோட்பாடுகளாக மாறக்கூடிய நன்னாள் எந்நாளோ? அந்நாள் வரும். வள்ளுவர் காட்டிய அரசியல் வாழ்க! .