பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. "தன்னெஞ்சே தன்னைச் சுடும்" உலகில் மக்கள் தீயவராக இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல - நல்லவராக இருக்க வேண்டும் என்பதும் மிக மிக இன்றியமையாதது. ஆனால் மக்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றார்களா? நான்கு காரணங்கள்: உலகில் ஒரு சிலராயினும்-ஒரு சில வேளைகளிலாயினும் நல்லவர்களாக இருப்பதற்கு நான்கு காரணங்கள் கூறலாம். அவை: அரச ஆணை, சமூகச் சூழ்நிலை, கடவுள் நம்பிக்க்ை மனச் சான்று என்பனவாம். அரச ஆணை: இந்த நான்கு காரணங்களுள் ஒன்றாலோ அல்லது பலவாலோ மக்கள் நல்லவர்களாய் நடக்கின்றனர்; ஆம்! நாம் இந்தத் தீமையைச் செய்தால் அரசு நம்மை ஒறுக்கும் என்று அரச ஆணைக்கு அஞ்சிச் செய்யாது விடுகின்றனர். அரச ஆணைக்கு அஞ்சுபவர்கள் சிலருங்கூட, தீமைகளை மறைவாகச் செய்கின்றனர். ஆயினும், ஒரு சிலராயினும் அரச் ஆணைக்கு அஞ்சித் தீமை" செய்யாதிருப்பது மக்கள் குலத்திற்கு ஆதாயக் கணக்கே. SSAAAS S S S S S S S S சமூகச் சூழ்நிலை: அடுத்து, அரச ஆணைக்கு அஞ்சுபவரைக் காட்டிலும், சமூகச் சூழ்நிலைக்கு அஞ்சுபவர் மிகவும் குறைவே! சமூகச் சூழ்நிலைக்கு அஞ்சுதல் என்றால், நாம் இந்தத் தீமையைச்